இந்தியாவில் ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதால் ஸ்கூட்டர்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். 

Continues below advertisement

பெண் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் Vespa ஏராளமான ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களின் ஸ்கூட்டர்கள் என்னவென்று கீழே காணலாம்.

1. Vespa 125:

இந்த Vespa 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 555. மொத்தம் 4 வேரியண்ட்கள் இதில் உள்ளது. புதிய வேரியண்ட் 125 Tech 80th Edition விரைவில் வெளியாக உள்ளது. டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7. 4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 39 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 288 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

Continues below advertisement

2. Vespa S 150:

வெஸ்பா நிறுவனத்தின் 150 சிசி எஞ்ஜின் ஸ்கூட்டரான Vespa S 150 இரண்டு வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் ரூபாய 1 லட்சத்து 79 ஆயிரத்து 604ம், இரண்டாவது வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 621-க்கும் விற்கப்படுகிறது. டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

3. Vespa 150:

வெஸ்பா நிறுவனத்தின் மற்றொரு 150 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் Vespa 150. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரத்து 875. இதில் 2 வேரியண்ட் உள்ளது. விரைவில் 3வது வேரியண்ட் வர உள்ளது. 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 35 முதல் 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டேங்கரை நிரப்பினால் 296 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

4. Vespa ZX 125:

வெஸ்பா நிறுவனத்தின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 775. இதில் 124.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 45 கிலோமீட்டர் வரை மைலேஜ்  அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 333 கி.மீட்டர் மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது.

5. Vespa S 125:

வெஸ்பா நிறுவனத்தின் Vespa S 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 975. இதில் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 975. மற்றொரு வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 26 ஆயிரத்து 087. இந்த ஸ்கூட்டரிலும் 7.4 பெட்ரோல் டேங்கர் உள்ளது. 124.5 சிசி திறன் கொண்டது. 37.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டேங்கரை நிரப்பினால் 278 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

6.Vespa Officina 8:

வெஸ்பா நிறுவனத்தின் Vespa Officina 8 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 747. இதில் 124.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 37.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 7.4 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கருப்பு நிறம் மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக 86 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். டேங்கரை நிரப்பினால் 277.5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

வெஸ்பா ஸ்கூட்டரின் வேகம், தரம் ஆகியவற்றின் காரணமாக பலராலும் அந்த ஸ்கூட்டர் விரும்பி வாங்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI