வெஸ்பா நிறுவனம் இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக உள்ளது. இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. பெண் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த தயாரிப்புகள் உள்ளது.

Continues below advertisement

Vespa S 150 ஸ்கூட்டரின் தரம், மைலேஜ், விலை குறித்து கீழே காணலாம்.

விலை:

இந்த Vespa S 150 ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1. S 150 Standard - ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 604

2.  S 150 Tech 150 - ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 621

முதல் வேரியண்டில் இல்லாத ப்ளூடூத், ஜிபிஎஸ், ஸ்டாண்ட் அலார்ம் வசதி இரண்டாவது வேரியண்டில் உள்ளது. இதில் 149.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 115 கிலோ எடை கொண்டது. 770 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.

260 கி.மீட்டர் மைலேஜ்:

மஞ்சள், கருப்பு, பச்சை, சாம்பல் என 10 வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது. இதில் 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 35 முதல் 40 கிலோமீட்டர் வரை இது மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 260 கிலோமீட்டர் முதல் 295 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 3 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

முன்பக்கம் 11 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. 

ஸ்பீடோமீட்டர் அனலோக், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் தோற்றம் மிகவும் வசீகரமாக இருப்பதால் பெண்கள் அதிகளவு இதை விரும்புகின்றனர். அதேசமயம், இதன் வேகமும், மைலேஜ் ஆற்றலும் இளைஞர்களையும் கவரும் வகையிலே அமைந்துள்ளது. இதன் தரம் காரணமாகவே இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI