இந்தியாவில் பெண்களை குறிவைத்து ஸ்கூட்டர் தயாரிப்பில் அசத்தி வரும் நிறுவனம் Vespa. இவர்களின் பல்வேறு தயாரிப்புகளும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலம் ஆகும்.

Continues below advertisement

Vespa 150:

இவர்களின் Vespa 150 ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Vespa 150 ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

Continues below advertisement

1. 150 Standard  - ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 619

2. 150 Tech 150 - ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்து 664

மைலேஜ்:

இந்த ஸ்கூட்டர் 149.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டது ஆகும். இதன் எடை 115 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 775 மி.மீட்டர் ஆகும். இதில் பெட்ரோல் டேங்கர் 7.4 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 

11.2 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. 11.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 11.2 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 3 வால்வுகள் பொருத்தப்பட்டது. பிஎஸ் 6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டேண்டர்ட் ஆகும். 45 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

வசதிகள்:

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 11 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாகனத்திற்கு வாரண்டி அளிக்கப்படுகிறது. 4 இலவச சர்வீஸ் உள்ளது. டிஜிட்டல் மற்றும் செமி டிஜிட்டல் இரண்டிலும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலோக்கில் உள்ளது. 

சிறப்புகள்:

2 ட்ரிப்மீட்டர்ஸ், டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ ஃப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி இல்லை. சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இருக்கிறது.  எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக் விளககுகள் ஹாலோஜன் ஆகும்.

இந்த ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு மிகவும் வசீகரமாகவும், பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் ஓட்டுவதற்கு வசதியாகவும் உள்ளது. இதனால், இதை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்தியாவில் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI