இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனம் வெஸ்பா. இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, பெண்களை கவரும் வகையில் மிகவும் தனித்துவமாக வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Vespa 125:
Vespa நிறுவனத்தின் Vespa 125 ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.
இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது.
1. 125 Standard - ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 555
2. 125 Tech 125 - ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்து 568
3. 125 Qala Edition - ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்து 568
4. 125 Qala Edition - விரைவில் அறிமுகம்
288 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த Vespa 125 ஸ்கூட்டரில் 124.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும். இதில் முதல் வேரியண்ட் தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. வெள்ளை, சிவப்பு, கருப்பு, நீலம் என 9 வண்ணங்களில் உள்ளது.
10.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 9.3 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 3 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். பெட்ரோலில் ஓடும் இந்த Vespa 125 ஸ்கூட்டரில் 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 288.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
சிறப்புகள்:
சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 11 இன்ச், பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வசதிகள்:
ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் ஃப்ரன்ட் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் 1.85 லிட்டர் உள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. முதல் வேரியண்டில் செமி டிஜிட்டல் மற்றும் மற்ற வேரியண்ட்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்பீடோமீட்டரில் அனலோக் உள்ளது. ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் ஆகும். 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம், லோ ப்யூல் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் ப்ரேக்கிற்கு பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும். நெருக்கடியான போக்குவரத்து நெரிசலிலும் ஓட்டுவதற்கு மிகவும் உகந்தது இந்த வெஸ்பா.
Car loan Information:
Calculate Car Loan EMI