sports cars launching in 2024:  அடுத்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, ஸ்போர்ட்ஸ் கார்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


ஸ்போர்ட்ஸ் கார்கள் 2024:


அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய SUVகள் மற்றும் மின்சார கார்களை நாம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம்.  அந்த வரிசையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்போர்ட்ஸ் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் லம்போர்கினி ரெவல்டோ, ஃபெராரி ரோமா ஸ்பைடர், லோட்டஸ் எமிரா, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி உள்ளிட்டவையும் அடங்கும். இந்த பட்டியலில் உள்ள இருக்கும் Mercedes-Benz CLE காரை தவிர, மற்ற அனைத்து மாடல்களின் விலையும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.


New Aston Martin Vantage


புதிய ஆஸ்டன் மார்டின் DB12 மாடலானது அதன் முந்தைய மாடலான DB12-லிருந்து முழுமையாக மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உட்புற வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படும் இந்த காரில், Mercedes-AMG-உள்ள 4.0-லிட்டர், ட்வின்-டர்போ V8 இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. காரின் விலை ரூ.3.5 கோடியிலிருந்து ரூ.4 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ferrari Roma Spider


ஃபெராரி ரோமா ஸ்பைடர் மாடலானது 3.9 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. 2+2 இருக்கை வசதி கொண்ட இந்த காரின் விலை, ரூ.4.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கார் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Lamborghini Revuelto


லம்போர்கினியின் புதிய ரெவோல்டோ கார் மாடல் மூன்று மின்சார மோட்டார்கள் மற்றும் 3.8kWh லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட புதிய 825hp, 6.5-லிட்டர் V12 இன்ஜினைப் பெறுகிறது. இவை மொத்தமாக  1,015hp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 6.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள இதன் விலை 9.5 கோடி ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


Lotus Emira


லோட்டஸ் நிறுவனத்தின் எமிரா மாடலானது  365hp, 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் AMG-ஆதார இன்ஜின் மற்றும் டொயோட்டாவின் மிகவும் சக்திவாய்ந்த 406hp, 3.0-லிட்டர் V6 இன்ஜின் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முதல் வகையானது 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் உடன் மட்டுமே கிடைக்கிறது. மற்றொன்று மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2.2 கோடியிலிருந்து ரூ. 2.5 கோடி வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


McLaren 750S


720S சூப்பர் காருக்குப் மாற்றாக 750S காரை மெக்லாரென் களமிறக்குகிறது. மிட்-மவுண்டட் 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் மூலம் இது இயக்கப்படுகிறது.  750hp மற்றும் 800Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகுன் என கூறப்படும் இந்த காரின் விலை 5 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. 


New Maserati GranTurismo


Maserati GranTurismo இரண்டு கதவுகள், நான்கு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதில் பழைய V8 இன்ஜின் இல்லாவிட்டாலும், புதியதாக உருவாக்கப்பட்ட 3.0-லிட்டர் ட்வின்-டர்போ V6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மொடெனாவில் 490hp மற்றும் ட்ரோஃபியோ தோற்றத்தில் 550hp ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் விலை 3 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.


New Mercedes-AMG GT:


புதிய GT மாடலானது இரட்டை-டர்போ 4.0-லிட்டர் V8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  இது 55 4மேடிக்+ மோடில் 476hp மற்றும் 63 4Matic+ guise இல் 585hp ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படும் இந்த காரின் விலை, 2.5 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


New Mercedes-Benz CLE


புதிய CLE என்பது இரண்டு கதவு, 2+2 இருக்கைகள் கொண்டது, . வரம்பில் நான்கு மற்றும் ஆறு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டின் இறுதியில் வெளியாகும் என கூறப்படும் இந்த காரின் விலை 1.1 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI