Upcoming Car, SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மே மாதத்தில் 5 கார்கள் மற்றும் எஸ்யுவிக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மே மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை:
இந்த மே மாதத்தில் நீங்கள் புதிய கார் அல்லது SUV வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய வாகனங்களின் விவரங்கள் உங்களது பரீசிலனைக்காக கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே உள்ள மாடல்களின் புதுப்பிப்புகள் மற்றும் சில புதிய மாடல்களும் இடம்பெற்றுள்ளன.
ஃபோர்ஸ் கூர்க்கா:
2024 ஃபோர்ஸ் கூர்க்கா அண்மையில் அறிமுகமானது மற்றும் 3-கதவு மற்றும் 5-கதவு வடிவங்களில் விற்பனைக்கு வர உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலின் போட்டியாளரான இந்த கார், புதிய 4x4 சுவிட்ச் கியர், கூடுதல் அம்சங்கள், பெரிய சக்கரங்கள், ஏழு இருக்கைகள் (5-கதவு பதிப்பிற்கு) மற்றும் அதிக சக்திவாய்ந்த இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களை பெறுகிறது. இதன் விலை சந்தைப்படுத்தலின்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட்:
அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் இந்தியாவில் மாருதி சுசுகியின் அடுத்த பெரிய அறிமுகமாகும். இந்த மாதம் விற்பனைக்கு வரும், புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் சுசுகியின் புதிய Z12E 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெறும். அதோடு வெளிப்புறத்தில் காட்சி மேம்பாடுகள், ஃப்ரான்க்ஸ்/பலேனோவால் ஈர்க்கப்பட்ட புதிய கேபின் தளவமைப்பு மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், எல்ஈடி விளக்குகள், டைமண்ட் போன்ற பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் காரின் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர்:
Tata Altroz Racer இந்த மாதம் விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் i20 N லைன் போட்டியாளரான, Altroz iTurbo போன்ற அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதிக ட்யூன் அதாவது 120hp மற்றும் 170Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. தற்போது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். தனித்துவமான 'ரேசர்' பேட்ஜ்களைத் தவிர, Altroz Racer ஆனது டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம், ஒரு திருத்தப்பட்ட கிரில் மற்றும் நிலையான Altroz உடன் ஒப்பிடும் போது, 16-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
டாடாநெக்ஸான் சிஎன்ஜி:
டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாடலானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் முதன்முதலில் காட்டப்பட்டது. அதன்படி நெக்ஸான் சிஎன்ஜி இந்த மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டாவது டாடா மாடலாக இருக்கும். பஞ்ச் CNG, Tiago CNG மற்றும் Tigor CNG போன்ற அதே இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை இது பயன்படுத்தும். 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினின் பவர் மற்றும் டார்க் வெளியீடு, சிஎன்ஜியுடன் இணைக்கப்படும் போது சிறிது குறையும். டாடா நெக்ஸான் சிஎன்ஜி, டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொண்ட நாட்டின் முதல் சிஎன்ஜி கார் ஆகும். மேலும், Tata Nexon CNG ஆனது விருப்பமான தானியங்கி கியர்பாக்ஸுடன் வழங்கப்படலாம்.
புதிய பனமேரா:
கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மூன்றாம் தலைமுறை போர்ஸ் பனமேரா இறுதியாக இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூ.1.68 கோடியிலிருந்து தொடங்குகிறது. Panamera ஒரே 2.9 லிட்டர், ட்வின்-டர்போ V6 இன்ஜின் மற்றும் 8-ஸ்பீடு PDK ஆட்டோவுடன் வழங்கப்பட்டுள்ளது. இது பின் சக்கரங்களுக்கு மட்டுமே ஆற்றலை அளிக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI