Maruti Suzuki E Vitara: இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் நிறுவனம் மாருதி சுசுகி. இவர்களின் கார்களுக்கு என்று கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகெங்கும் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு முழுவீச்சில் பரவி வருகிறது. 

Maruti Suzuki E Vitara:

இந்தியாவிலும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனமும் தங்களது புதிய மின்சார காரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மாருதி சுசுகி இ விதாரா எனும் இந்த மின்சார காரை பிரதமர் மோடியே கொடியசைத்து அறிமுகப்படுத்தினார். 

இந்த கார் Hyundai Creta Electric, Tata Curvv EV and Harrier EV, Mahindra XEV 9e உள்ளிட்ட முன்னணி மின்சார கார்களுக்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் இரண்டு வகையான பேட்டரிகள் கொண்ட வடிவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்று 48.8 கிலோவாட் பேட்டரி கொண்ட இ விதாரா கார். மற்றொன்று 61.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட  இ விதாரா கார். 

எவ்ளோ மைலேஜ்?

இந்த 61.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ விதாரா ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். 49 கிலோவாட் பேட்டரி கொண்ட இ விதாரா 144 பிஎஸ் மற்றும் 192.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 61.1 கிலோவாட் பேட்டரி கொண்ட இ விதாரா 174 பிஎஸ் மற்றும் 192. 5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். 

இத்தனை ஸ்பெஷலா?

இந்த காரின் பேட்டரி வேகமாக சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 0வில் இருந்து 80 சதவீத சார்ஜை 50 நிமிடங்களில் எட்டிவிடும். இந்த காரில் பயணிகளின் வசதிக்காக மொத்தம் 7 ஏர்பேக்ஸ் உள்ளது. 360 டிகிரி கேமரா உள்ளது. ஈஎஸ்பி எனப்படும் Electronic Stability Program உள்ளது. 10.25 இன்ச் தொடுதிரை எனப்படும் டச் ஸ்கிரீன் உள்ளது. 10.1 இன்ச்சில் ஓட்டுநருக்கு தனி டிஸ்ப்ளே உள்ளது. ஒயர்லஸ் செல்போன் சார்ஜர் உள்ளது. 

விலை என்ன?

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 18 லட்சம் ஆகும். இது டெல்டா, ஜெடா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் உருவாகிறது. இ்ந்த மாருதி சுசுகி இ விதாரா டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஹார்டெக்ட் இ ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. இதில் லெவல் 2 ஏடிஏஎஸ் வசதி உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த காரை இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, ப்ரான்ஸ் மற்றும் நெதர்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது. இந்த மின்சார காரான இ விதாரா உலகளாவிய கார் சந்தையில் மாருதி சுசுகிக்கு மிகப்பெரிய வரவேற்பை உண்டாக்கும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

எப்போது அறிமுகம்?

இந்த காரின் நிறமும், வடிவமும், கேபின் வடிவமைப்பும் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக மாருதி சுசிகி இ விதாரா சந்தையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் தற்போது மின்சார கார்களின் விற்பனைதான் சக்கைப்போடு போட்டு வருகிறது. டாடா, ஹுண்டாய், மஹிந்திரா என அனைத்து நிறுவனங்களும் மின்சார கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, டாடா நிறுவனம் பஞ்ச், டியாகோ என மின்சார காரிலே பல மாடல்களை சந்தையில் இறக்குமதி செய்து வெற்றி கண்டு வருகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI