இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மின்சார பைக்குகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

Ultraviolette Shockwave:

மின்சார பைக்குகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இந்தியாவில் Ultraviolette நிறுவனம் உள்ளது. இவர்கள் இந்தியாவில் ஏற்கனவே மின்சார பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள மின்சார பைக் Ultraviolette Shockwave பைக் அறிமுகமாக உள்ளது. 

அடுத்தாண்டு முதல் காலாண்டில் இந்த Ultraviolette Shockwave இ பைக் அறிமுகமாக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.  இந்த இ பைக் 100 வாட் எலக்ட்ரிக்கல் ஆர்க்டெக்சர் கட்டமைப்பை கொண்டது. எடை இலகுவாக உருவாக்கப்படும் இந்த இ பைக் ஒரு இருக்கை மற்றும் இரண்டு இருக்கையுடன் உருவாக்கப்படுகிறது.

Continues below advertisement

165 கி.மீட்டர் மைலேஜ்: 

இதில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இ பைக்கில் செல்லலாம். 60 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகள் வேகத்தில் எட்டலாம். 

இதில் டூயல் சேனல் ஏபிஎஸ், 4 ட்ராக்ஷன் கன்ட்ரோல், 6 லெவல் ரிஜெனரெட்டிவ் ப்ரேக்கிங் வசதிகள் உள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச் சக்கரங்களும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்களும் பொருத்தப்படுகிறது.  60 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டலாம். 14.5 எச்பி மோட்டார் ஆற்றல் கொண்டது. 505 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக இந்த Ultraviolette Shockwave இ பைக் விற்பனைக்கு வர உள்ளது.

விலை எப்படி?

அடுத்தாண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த Ultraviolette Shockwave இ பைக்கின் விலை ரூபாய் 1.75 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை ஓசூரில் அமைந்துள்ளது. ஓசூரில் இந்த புதிய Ultraviolette Shockwave பைக் உருவாகி வருகிறது.

மற்றொரு புதிய பைக்:

அல்ட்ராவயலட் நிறுவனம் இந்த பைக் மட்டுமின்றி Ultraviolette Tesseract என்ற மின்சார பைக் ஒன்றையும் தயாரித்து வருகிறது. இந்த பைக் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த இ பைக்கின் விலை ரூபாய் 1.40 லட்சம் முதல் ரூபாய் 1.50 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே இந்தியாவில் Ultraviolette X47 Crossover இ பைக், Ultraviolette F77 Mach 2 இ பைக், Ultraviolette F77 SuperStreet இ பைக் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI