இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர், இ பைக் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ள இ வாகன தயாரிப்பு நிறுவனம் Ultraviolette. 

Continues below advertisement

இவர்களின் இ ஸ்கூட்டர் மற்றும் இ பைக் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Ultraviolette Tesseract:

இந்த Ultraviolette Tesseract இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 578 ஆகும். இதில் 3 வேரியண்ட் உள்ளது. 3.5 கிலோவாட், 5 கிலோவாட் மற்றும் 6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 162, 220 மற்றும் 261 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது இந்த இ ஸ்கூட்டர். வெள்ளை, சாம்பல், சிவப்பு மற்றும் சந்தன நிறம் கொண்டது.

Continues below advertisement

2.Ultraviolette X47 Crossover:

இந்த Ultraviolette X47 Crossover இ பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரத்து 620. இதில் மொத்தம் 16 வேரியண்ட் உள்ளது. 7.1 கிலோவாட் பேட்டரி மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி வேரியண்ட் பொருத்தப்பட்டுள்ளது. 211 கிலோமீட்டர் மைலேஜ் மற்றும் 323 கிலோமீட்டர் மைலேஜ் வரை அளிக்கிறது. 197 கிலோ எடை கொண்டது.

3. Ultraviolette F77 Mach 2:

இந்த Ultraviolette F77 Mach 2 இ பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950. இதில் மொத்தம் 12 வேரியண்ட் உள்ளது. இதில் 7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 211 கிலோமீட்டர் மைலேஜ் மற்றும் 323 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 155 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

4. Ultraviolette F77 SuperStreet:

இந்த Ultraviolette F77 SuperStreet இ பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950. இதில் மொத்தம் 8 வேரியண்ட் உள்ளது.  7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 211 கிலோமீட்டர் மற்றும் 323 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது.

5. Ultraviolette Shockwave:

இந்த Ultraviolette Shockwave இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 82 ஆயிரத்து 213. ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. 165 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 120 கிலோ எடை கொண்டது.

சிறப்பான தோற்றம், மைலேஜ் ஆகியவற்றின் காரணமாக Ultraviolette நிறுவன இ பைக் மற்றும் இ ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் வரவேற்பை பெற்று வருகிறது.  ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்பீடோமீட்டர் ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதியும், 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதியும், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதியும் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI