இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர்களும், பைக்குகளும் இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும். இன்று டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தாலும், ஆரம்ப காலங்களில் டிவிஎஸ்-க்கு புகழ்பெற்றுத் தந்தது டிவிஎஸ் 50.

Continues below advertisement

TVS XL 100 Heavy Duty:

இன்று அது தயாரிப்பில் இல்லாவிட்டாலும் அதே வடிவத்தில் அதிக எஞ்ஜின் பொருத்தப்பட்ட மொபைட் வண்டியை டிவிஎஸ் தொடர்ந்து தயாரித்து வருகிறது. விவசாயிகள், வியாபாரிகள் என உழைக்கும் வர்க்கத்தினரின் அடையாளமாகவே இந்த மாடல் வண்டி உள்ளது. அப்படி உழைக்கும் வர்க்கத்தின் அடையாளமாக திகழ்வது TVS XL 100 Heavy Duty மொபைட் ஆகும். இதன் திறன், ஆற்றல், விலை குறித்து கீழே காணலாம்.

விலை:

இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. XL 100 Heavy Duty Kick Start  - ரூபாய் 62 ஆயிரத்து 679

2. XL 100 Heavy Duty i-Touch Start - ரூபாய் 75 ஆயிரத்து 001

3.  XL 100 Heavy Duty Winner Edition - ரூபாய் 78 ஆயிரத்து 498

4.  XL 100 Heavy Duty Winner Edition - ரூபாய் 80 ஆயிரத்து 42

வசதிகள்:

இதில் டாப் வேரியண்டில் மட்டும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் தவிர மற்ற 3 வேரியண்ட்களில் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.  இந்த XL 100 Heavy Duty மொபைட்டில் 99.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மொபைட்டில் 57 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. இதன் எடை 88 கிலோ ஆகும். 4 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 4.3 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 6.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 58 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். எஸ்பிடி ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 இன்ச், பின்பக்கம் 16 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் டைப் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்விங் ஆர்ம் வித் ஹைட்ராலிக் ஷாக்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 787 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும். 145 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1.25 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது. 

வாரண்டி:

36 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.  அனலோக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகும். டாப் வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களில் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும்.  இந்த XL 100 Heavy Duty மொபைட் நீலம், கருப்பு, பச்சை, கத்தரிப்பூ என 12 வண்ணங்களில் உள்ளது.

நகர்ப்புறங்களில் கியர் பைக்குகளும், ஸ்கூட்டர்களும் ஆதிக்கம் செலுத்தினாலும் கிராமப்புறங்களில் இந்த TVS XL 100 Heavy Duty மொபைட்டின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வாகனமாக இது உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI