TVS Orbiter V1 Rival: ரூ.50 ஆயிரம் என்ற தொடக்க விலையில் கிடைக்கும், டிவிஎஸ் ஆர்பிட்டர் V1-க்கு போட்டியாக உள்ளூரில் கிடைக்கும் ஸ்கூட்டர்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

டிவிஎஸ் ஆர்பிட்டர் V1:

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள டிவிஎஸ் ஆர்பிட்டர் V1 மாடலின் விலை, 48 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தரப்பில் விற்பனையில் உள்ள மிகவும் மலிவான மின்சார ஸ்கூட்டாராக உருவெடுத்துள்ளது. அதேநேரம், பேட்டரியை மாதாந்திர வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்தால், வெறும் 49 ஆயிரம் ரூபாய்க்கே இந்த புதிய ஸ்கூட்டரை பயனர்கள் சொந்தமாக்கலாம். இதில் இடம்பெற்றுள்ள 1.8KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால், 86 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகோ மற்றும் பவர் எனும் இரண்டு மோட்களை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை, 2 மணி நேரம் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் அறிமுகமாகியுள்ள ஆர்பிட்டர் V1 ஸ்கூட்டருக்கு போட்டியாக, உள்ளூரில் கிடைக்கும் மின்சார வாகனங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 

Continues below advertisement

டிவிஎஸ் ஆர்பிட்டர் V1 - போட்டியாளர்கள்:

இந்திய சந்தையில் ஆர்பிட்டர் V1 ஸ்கூட்டருக்கு மைலேஜ் மற்றும் விலை அடிப்படையில், 4 ஸ்கூட்டர்கள் போட்டியாளர்களாக திகழ்கின்றன. அந்த பட்டியலில் ஓலா S1 X, ஏதர் ரிஸ்டா, ஹீரோ விடா VX2, பஜாஜ் சேடக் C2501 ஆகிய மாடல்கள் அடங்கும்.

1. ஓலா S1 X

ஓலா நிறுவனத்தின் S1 X ஸ்கூட்டரின் 2KWh பேட்டரி பேக் கொண்ட எடிஷன், ரூ.82,99 என்ற விலை அடிப்படையில் ஆர்பிட்டர் V1 மாடலுக்கு நேரடி போட்டியாளராக திகழ்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 108 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் ஏற 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளுமாம்.

2. ஏதர் ரிஸ்டா எஸ்

ப்ரீமியம் கட்டமைப்பு மற்றும் பெரிய இருக்கைக்காக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஏதர் ரிஸ்டா எஸ் மாடலின் தொடக்க விலையானது ரூ.75,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.7KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால், 159 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகித சார்ஜிங்கை அடைய நான்கரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஹீரோ விடா VX2

வாடகை பேட்டரி ஆப்ஷனில் ஆர்பிட்டர் வி1 மாடல் கிடைப்பதை காட்டிலும், மலிவான விலையிலேயே ஹீரோவின் VX2 மாடல் கிடைக்கிறது. 2.2KWh மற்றும் 3.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை, 44 ஆயிரத்து 990 ரூபாயில் தொடங்கி 48 ஆயிரத்து 186 ரூபாய் வரை நீள்கிறது. பெரிய பேட்டரி ஆப்ஷனை முழுமையாக சார்ஜ் செய்தால் நிஜ உலக பயன்பாட்டில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாகவும், அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பதாகவும் ஹீரோ அறிவித்துள்ளது. சிறிய பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 3.5 மணி நேரமும், பெரிய பேட்டரிக்கு 5.4 மணி நேரமும் ஆகிறதாம்.

4. பஜாஜ் சேடக் C2501

பஜாஜ் சேடக் C2501 ஸ்கூட்டரின் ஸ்டீல் சோல்ட்ஜர் எனப்படும் எண்ட்ரி லெவல் வேரியண்டானது, சுமார் ரூ.87,100 என்ற விலையில் கிடைக்கிறது. வலுவாக உழைக்கும் திறன் , நம்பகமான ப்ராண்ட் மற்றும் வலுவான கட்டமைப்பு மூலமாக ஆர்பிட்டர் வி1-க்கான மாற்றாக பஜாஜ் சேடக் C2501 திகழ்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.5KWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 113 கிலோ மீட்டர் தூரம் வரையில் ரேஞ்சும், அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகித சார்ஜிங்கை அடைய, 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகிறதாம். 

மாடல்விலைஉறுதியளிக்கப்பட்ட ரேஞ்ச் (கி.மீ.,)அதிகபட்ச வேகம் (கி.மீ.,/மணிக்கு)
டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1ரூ.49,999/ரூ.84,5008668
ஹீரோ விடா VX2ரூ.44,99 - ரூ.48,18610070
ஏதர் ரிஸ்டா Sரூ.75,99915980
ஒல்லா S1 X (2KWh)ரூ.82,99910885
பஜாஜ் சேடக் C2501ரூ.87,10011355

 


Car loan Information:

Calculate Car Loan EMI