இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ். இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் TVS Norton Atlas adv.
இந்திய சந்தையில் அடுத்தாண்டு இந்த பைக் அறிமுகமாக உள்ளது.
இந்த பைக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. ஓசூரில் தயாரிப்பு:
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த TVS Norton Atlas adv பைக் தமிழ்நாட்டின் ஓசூரில் தயாராகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள நோர்டனின் தயாரிப்புக் கூடமான சோலிஹில் நகரில் இதன் பாகங்கள் உருவாக்கப்பட்டாலும், இதன் பாகங்கள் அனைத்தும் ஓசூரிலே இணைக்கப்பட்டு முழு வடிவம் பெறுகிறது.
2. 585 சிசி எஞ்ஜின்:
இந்த பைக்கில் 585 சிசி பாரலல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்படுகிறது. 57.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக இந்த பைக் உருவாகியுள்ளது. இந்த லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் 70 பி.எஸ். ஆற்றல் கொண்டது. 9 ஆயிரத்து 300 ஆர்பிஎம் கொண்டது.
3. சஸ்பென்சன்:
நெடுந்தூர பயணத்திற்கு உகந்த வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியமான சிறப்பம்சமாக இதன் சஸ்பென்சன் பார்க்கப்படுகிறது. இதில் 43 எம்எம் அப்சைட் டவுன் கேஒய்பி ஃபோர்க் மற்றும் ரியர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.
4. 6 கியர்கள்:
இந்த புதிய பைக்கில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் கியர் கீழேவும், மற்ற கியர்கள் மேலேவும் இருக்கும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. எலக்ட்ரானிக் த்ரோட்டில் வசதி கொண்டது.
5. சக்கரங்கள்:
இந்த பைக்கின் சிறப்பம்சமாக கருதப்படுவது சக்கரங்கள் கருதப்படுகிறது. கரடுமுரடான சாலையிலும் பயணிக்கும் வகையில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்படுகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மி.மீட்டர் வசதி கொண்டது.
6. டிஸ்க் ப்ரேக்:
இந்த பைக்கில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 310 மி.மீட்டர் செமி ஃப்ளோட்டிங் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் 270 மி.மீட்டர் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.
7. டிஎஃப்டி டிஸ்ப்ளே:
இந்த பைக்கின் மற்றொரு சிறப்பாக இருப்பது டிஎஃப்டி டிஸ்ப்ளே. நேவிகேஷன், ப்ளூடூத், வை-பை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது. யுஎஸ்பி சி போர்ட் வசதி கொண்டது.
Car loan Information:
Calculate Car Loan EMI