டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மற்றும் ஐசிஇ மாடல்கள் உள்ளிட்ட தனது ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பு இரு சக்கர வாகனங்களின் விலையை ரூ.9 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Jupiter 110, Jupiter 125 மற்றும் Ntorq 125 மாடல் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் iQube, Orbiter ஆகிய மாடல்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

Continues below advertisement

மின்சார வாகனங்கள் விலை உயர்வு

அதன்படி iQube ரக மின்சார இரு சக்கர வாகன மாடல்களில்  3.5kWh மாடலின் விலை ரூ.1.33 லட்சத்திலிருந்து ரூ.1.42 லட்சமாக அதிகரித்துள்ளது. டிவிஎஸ் அடிப்படை மாடலான 2.2kWh iQubeன் விலை ரூ.1.11 லட்சத்திலிருந்து ரூ.5,000 உயர்ந்துள்ளது. தற்போது ரூ.1.16 லட்சமாக அதன் விலை உள்ளது. அதே சமயம் iQube S (4.7kWh) மாடலின் விலை ரூ.1.55 லட்சத்திலிருந்து ரூ.1.61 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ரூ.6 ஆயிரம் அதிகமாகும். அதேபோல் iQube ST (5.3kWh) மாடல் விலை ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3.1kWh iQube மாடலின் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேபோல் டிவிஎஸ் ஆர்ப்பிட்டர் மின்சார ஸ்கூட்டர்களும் பின்வரும் வகையில் விலை உயர்வை கண்டுள்ளது. ஆர்பிட்டர் V1 மாடலின் விலை ரூ.3,700 உயர்ந்து ரூ.95,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் V2 மாடலின் விலை  ரூ.1.16 லட்சமாக விற்பனையில் உள்ளது.

Also Read: Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்

பெட்ரோல் பைக்குகளின் விலை உயர்வு

பெட்ரோல் மாடல் பொறுத்தவரை ஜூபிடர் மாடல் வாகனங்கள் 110 வேரியண்டை பொறுத்து ரூ.73,975 முதல் ரூ.88,850 வரை உள்ளது. இது ரூ.575 முதல் ரூ.1,950 வரை உள்ளது. ஜூபிடர் 125 ரூ.875 முதல் ரூ.2,410 வரையிலான விலை உயர்வைக் கண்டு ரூ.81,110 முதல் ரூ.89,235 வரை உயர்ந்துள்ளது. மேலும் என்டார்க் 125 டிஸ்க் வேரியன்ட்டின் விலை ரூ.82,500லிருந்து ரூ.850 உயர்ந்து ரூ.83,350 ஆக உயர்ந்துள்ளது.  இதேபோல் என்டார்க் 125 ரேஸ் எடிஷனின் விலையும் ரூ.87,950லிருந்து ரூ.88,800 ஆக, அதிகரித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI