TVS E Scooters: இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர்கள், பைக்குகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. உலகம் முழுவதும் தற்போது மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் மாறி வருகின்றனர். இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

டிவிஎஸ் நிறுவனமும் மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன? தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1.TVS iQube:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டர் TVS iQube. இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. 2.2 கிலோவாட் பேட்டரி, 3.1 கிலோவாட் பேட்டரி, 3.5 கிலோவாட் பேட்டரி, 5.3 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 978 ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரத்து 238 ஆகும்.  டாப் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

Continues below advertisement

2.TVS Orbiter V1:

டிவிஎஸ் நிறுவனம் ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய இ ஸ்கூட்டர் TVS Orbiter V1. இந்த இ ஸ்கூட்டரின் ஆன்ரோட் விலை ரூபாய் 93 லட்சத்து 758 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 86 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்வதற்கு ஆகும். 101 கிலோ எடை கொண்டது. கருப்பு - வெள்ளி கலந்த கலவை நிறம், கருமஞ்சள் நிறத்தில் உள்ளது. 

3. TVS Orbiter V2:

இந்த TVS Orbiter V2 இ ஸ்கூட்டருக்கு சந்தையில் பலத்த வரவேற்பு உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 405 ஆகும். இதன் எடை 112 கிலோ ஆகும். இதில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வற்கு 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகிறது. கருஞ்சாம்பல், வெள்ளி கருப்பு கலந்த நிறம், நீலம், மஞ்சள் என 6 வண்ணங்களில் இந்த TVS Orbiter V2 இ ஸ்கூட்டர் உள்ளது. 

4. TVS X:

வசீகரமான தோற்றத்தில் டிவிஎஸ் நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்ட இ ஸ்கூட்டர் இந்த TVS X. இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 77 ஆயிரத்து 973. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இதில் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

டிவிஎஸ் இ ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் வசதி, எஸ்எம்ஸ்/போன் கால் அலர்ட் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI