இந்திய சந்தையில் மலிவு விலை ஹைப்ரிட் எஸ்யூவி-க்களுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு, டொயோட்டா ஹைரைடர் ஒரு சிறந்த உதாரணம். இந்த மிட் சைஸ் எஸ்யூவி, அதன் ஹைப்ரிட் தொழில்நுட்பம், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றால் பிரபலமானது. அதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் பற்றி பார்ப்போம்.
டொயோட்டா ஹைரைடரின் விலை என்ன.?
இந்தியாவில் டொயோட்டா ஹைரைடர் விலை 11.34 லட்சம் ரூபாயில் (எக்ஸ் - ஷோரூம்) தொடங்கி, 20.19 லட்சம் ரூபாய் ( எக்ஸ்-ஷோரூம் ) வரை செல்கிறது. CNG வேரியண்ட் 13.81 லட்சம் ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மாநில வரிகள் மற்றும் காப்பீட்டைப் பொறுத்து, ஆன் ரோடு விலைகள் மாறுபடலாம். ஆகஸ்ட் மாதத்தில் 9,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த SUV-யின் விற்பனை வலுவாக உள்ளது .
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 9 - இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது . இது வயர்லெஸ் சார்ஜிங், யூ.எஸ்.பி போர்ட், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் 8 வழி எலக்ட்ரிக் டிரைவர் இருக்கை ஆகியவற்றுடன் வருகிறது. பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் அதன் பிரீமியம் உணர்வை அதிகரிக்கின்றன.
டொயோட்டா ஹைரைடரின் பாதுகாப்பு அம்சங்கள்
டொயோட்டா ஹைரைடர் பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. இதில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ESC, 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. கூடுதலாக, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு(TPMS) மற்றும் ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இது குடும்பமாக செல்வதற்கு நம்பகமான வாகனமாக அமைகிறது .
எஞ்சின் விருப்பம் மற்றும் செயல்திறன்
ஹைரைடர், மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட்( கே- சீரிஸ் ), 1.5 லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட்( டிஎன்ஜிஏ) மற்றும் 1.5 லிட்டர் சிஎன்ஜி எஞ்சின் ஆகிய விருப்பங்களில் உள்ளன. இந்த எஞ்சின்கள் அனைத்தும், வெவ்வேறு தேவைகளைப் பொறுத்து நல்ல செயல்திறன் மற்றும் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றன.
கார் எவ்வளவு மைலேஜ் தரும்.?
டொயோட்டா ஹைரைடர் அதன் எரிபொருள் செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்கது. இதன் பெட்ரோல் மைல்ட் -ஹைப்ரிட் லிட்டருக்கு 19.39 முதல் 21.12 கிமீ மைலேஜையும், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வேரியன்ட் ஒரு கிலோவிற்கு 26.6 கிமீ மைலேஜையும் வழங்குகிறது(ARAI). இந்த எஸ்யூவியில், முழு டேங்க்கை நிரப்பினால், தோராயமாக 1,200 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.
டொயோட்டா ஹைரைடர் குறைந்த பராமரிப்பு செலவுகள், ஹைப்ரிட் தொழில்நுட்பம், சிறந்த மைலேஜ் மற்றும் டொயோட்டாவின் தரமான சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. அதன் பனோரமிக் சன்ரூஃப், பிரீமியம் உட்புறம் மற்றும் பிரிவில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை, இதை குடும்பம் மற்றும் நகர ஓட்டுநர் இருவருக்கும் ஏற்ற SUV-யாக ஆக்குகின்றன. அதனால்தான், இது நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI