Toyota Urban Cruiser Hyryder Drawbacks: டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் மாடல் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார்கள் மைல்ட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என இரண்டு வகைகளாக விற்பனை செய்யப்படுகின்றன. மைல்ட் ஹைப்ரிட் என்பது சிறிய மின்சார மோட்டாரை கொண்டு காரின் ஆக்சிலரேஷனுக்கு ஊக்கமளிக்கிறது. ஆனால், இதில் முழுமையான மின்சார ஆற்றலை கொண்டு காரை இயக்க முடியாது. அதேநேரம், வலுவான ஹைப்ரிட்டில் பெரிய பேட்டரியை கொண்டு காரை முழுமையாக மின்சார ஆற்றலில் இயக்க முடியும். இது காரின் எரிபொருளை கணிசமாக உயர்த்த உதவுகிறது. இந்நிலையில், அதிகப்படியான விற்பனை, வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வு மற்றும் ப்ராண்ட் வேல்யூ ஆகியவற்றில் டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் ஹைரைடர் முதன்மையானதாக விளங்குகிறது. ஆனால், இதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் நாட்டிலேயே அதிகமாக விற்பனையாகும் வலுவான ஹைப்ரிட் காரில் உள்ள குறைகள், யாருக்கு இது பொருந்தாது மற்றும் மாற்று ஆப்ஷன்கள் என்ன? என்பது போன்ற விவரஙள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

அர்பன் க்ரூசர் ஹைரைடர் - முக்கிய குறைகள்

1. வலுவான ஹைப்ரிட் - அதிகப்படியான விலை

மைல்ட் ஹைப்ரிட் எடிஷனுடன் ஒப்பிட்டால் வலுவான ஹைப்ரிட் எடிஷனின் தொடக்க விலை மிகவும் அதிகமாகும்.

2. பூட் ஸ்பேஸ் பற்றாக்குறை

வலுவான ஹைப்ரிட் எடிஷனில் பேட்டரி கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து கொள்வதால் இதன் பூட் ஸ்பேஸ் 255 லிட்டராக குறைகிறது. பிரதான போட்டியாளர்கள் உடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவாகும்.  

3. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத செயல்திறன்

வேகமான ஆக்சிலரேனுக்கு பதிலாக எரிபொருள் செயல்திறனுக்காக இது மேம்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஓவர்டெக் செய்ய முயலும்போது உரிய திட்டமிடல் வேண்டும்.

4. உட்புற தரத்தில் சமரசம்

கேபினில் கடினமான ப்ளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டியாளர்களாக ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்கள் உட்புறத்தில் மிகவும் ப்ரீமியம் அனுபவத்தை கொண்டுள்ளது.

5. டீசல் ஆப்ஷன் இல்லை

இன்ஜின் எரிபொருள் ஆப்ஷன் இல்லாததால் டீசல் செயல்திறன் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்காக காரை வாங்க விரும்புபவர்களுகு அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஏற்றதாக இருக்காது.

6. ஆல் வீல் ட்ரைவ் இல்லை

ஆட்டோமேடிக் அல்லது வலுவான ஹைப்ரிட் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் ஹைப்ரிட் வசதி இல்லை.

7. கூடுதல் பராமரிப்பு செலவு

வழக்கமான பராமரிப்புச் செலவு நியாயமானதாகவே இருக்கும். ஆனால், ஹைப்ரிட் தொழில்நுட்பம் சார்ந்த பழுதுபார்ப்புப் பணிகள் (உத்தரவாதக் காலத்திற்குப் பிறகு தேவைப்பட்டால்) சாதாரண பெட்ரோல் வாகனங்களை விட அதிகச் செலவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் - யாருக்கு செட் ஆகாது?

  • ஆக்சிலரேஷனை காட்டிலும் எரிபொருள் செயல்திறனில் அதிக கவனம் செலுத்துவதால், வலுவான செயல்திறனை எதிர்பார்ப்பவர்களுக்கு அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஏற்றதாக இருக்காது
  • அதிகப்படியான பூட் ஸ்பேஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பொருந்தாது
  • தாராளான அம்சங்கள் மற்றும் வசதிகள் இருந்தாலும், காரின் உட்புறம் ப்ரீமியம் அனுபவத்தை வழங்க வேண்டுமென எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம் உருவாகலாம்
  • நீண்ட தூர பயணங்கள் மற்றும் எரிபொருள் செயல்திறனை எதிர்பார்த்தால், டீசல் ஆப்ஷன் இல்லாதது அர்பன் க்ரூசர் ஹைரிடரின் குறையாகவே உள்ளது
  • வசதியான கையாளுதலுக்காக ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்போர்டி ஹேண்ட்லிங்கிற்கு பொருந்தாது
  • வலுவான ஹைப்ரிட் எடிஷன் அதிகப்படியான விலையை கொண்டிருப்பதால் பட்ஜெட்டில் காரை வாங்க விரும்புவோருக்கு ஏற்புடையதாக இல்லை
  • 5 பேர் வரை தாரளமாக இடநெருக்கடி இன்றி பயணிக்க முடிந்தாலும், அதிகப்படியான லக்கேஜ் உடன் குடும்பமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு சிரமமாக இருக்கலாம்
  • ஆட்டோமேடிக் கியர்பாக்ஸில் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் எதிர்பார்ப்பவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும்

அர்பன் க்ரூசர் ஹைரைடர் - மாற்று ஆப்ஷன்கள்

டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் ஹைரைடர்  உடன் ஒப்பிடுகையில் அதன் குறைபாடுகள் அடிப்படையில் இந்திய சந்தையில் பல மாற்றும் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. குடும்ப பயன்பாட்டிற்கான ஆல்-ரவுண்டர் எஸ்யுவிக்கு ஹுண்டாய் க்ரேட்டா, செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு கியா செல்டோஸ், நடைமுறைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு ஹோண்டா எலிவேட், தொழில்நுட்ப அம்சங்கள் பிரதான இலக்காக இருந்தால் எம்ஜி ஏஸ்டர், அட்டகாசமான பயண அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஸ்கோடா குஷக், வாகனம் ஓட்டுவதை கொண்டாடுபவராக இருந்தால் ஃபோக்ஸ்வாகன் டைகன் சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI