Worlds no.1 automobile manufacturer: டொயோட்டா நிறுவனம் 2023ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு கோடியே 15 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.


உலகின் நம்பர் 1 வாகன உற்பத்தியாளர்:


டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் 2023 ஆம் ஆண்டில் மற்ற ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களையும் விட, அதிகமான பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. இதன் மூலம் ஃபோக்ஸ்வேகன் ஏஜியைத் தாண்டி, தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் சிறந்த கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை தக்கவத்துள்ளது. துணை நிறுவனங்களான Daihatsu Motor Co. மற்றும் Hino Motors Ltd. உட்பட உலகளாவிய விற்பனை, முந்தைய ஆண்டை 2023ல்  7.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2023ல் டொயோட்டா நிறுவனம் ஒரு கோடியே 12 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. அதோடு, கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்டின் உற்பத்தி திறன் 8.6 சதவிகிதம் அதிகரித்து மொத்தமாக, 1 கோடியே 15 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஃபோக்ல்வெகன் நிறுவனத்தின் உற்பத்தி, 12 சதவிகிதம் அதிகரித்து 92 லட்சத்து 40 ஆயிரம் யூனிட்களாக உள்ளது.  இதுதொடர்பாக பேசியுள்ள ப்ளூம்பெர்க் உளவுத்துறை மூத்த ஆட்டோ ஆய்வாளர் டாட்சுவோ யோஷிடா,”டொயோட்டா கடந்த கோடையில் சப்ளை செயின் பிரச்னையில் இருந்து மீண்ட பிறகு, அந்நிறுவனம் எதை உற்பத்தி செய்தாலும் விற்பனையகும் நிலைக்கு சென்றுள்ளது" என பாராட்டியுள்ளார்.


தொடர் வெற்றிக்கான காரணம் என்ன?


உலகளாவிய மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தில் டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து பின்தங்கி இருந்தாலும்,  கடந்த ஆண்டு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விநியோகச் சங்கிலிகள் மற்றும் நிலையான தேவையை மீட்டெடுத்தது. இது டொயோட்டா உற்பத்தியை அதிகரிக்க உதவியதோடு,  வெளிநாட்டில் இருந்து லாபத்தை ஈட்டியது. உள்நாட்டில் ஹைப்ரிட் மாடல்களுக்கான தேவை நீடித்த நிலையில்,  உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் அந்நிறுவனத்தின் கார் மாடல்களுக்கான தேவை நிலையானதாக உள்ளது. இதுவே அந்நிறுவனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் நம்பர் ஒன் உற்பத்தி நிறுவனமாக தொடர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


மின்சார வாகன துறையில் எப்படி?


2023ம் ஆண்டின் கார் விற்பனை விவரங்கள் டொயோட்டாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அதே வேளையில், மின்சார வாகன துறையில் Elon Musk இன் Tesla Inc. ஐ பின்னுக்கு தள்ளி,  சீனாவின் BYD Co நிறுவனம் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக உருவெடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.ன் மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஷென்சென்-அடிப்படையிலான BYD, 2023 இல் சுமார் 30 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 18 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்தில் முடிவடையும் நிதியாண்டில் 202,000 யூனிட்களை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது.  ஆனால் தேவை மற்றும் விநியோக சங்கிலி சிக்கல்களைக் காரணம் காட்டி நவம்பரில் அந்த இலக்கை 123,000 ஆகக் குறைத்தது. அதேநேரம், 2026 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 15 லட்சம் மின்சார வாகன விற்பனையும், 2030ம் ஆண்டில் ஆண்டுக்கு 35 லட்சம் மின்சார வாகன விற்பன என்ற இலக்கை எட்டுவோம் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI