Crysta Price Hike: டொயோட்டா நிறுவனம் தனது பிரபலமான எம்பிவி (MPV) காரான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, வேரியண்ட்டைப் பொறுத்து ரூ. 22,000 முதல் ரூ. 33,000 வரை உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த சமீபத்திய விலை உயர்வுடன், இன்னோவா கிரிஸ்டா தற்போது ரூ. 19.95 லட்சம் முதல் ரூ. 27.10 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

Continues below advertisement

இன்னோவா கிரிஸ்டா விலை உயர்வு - புதிய விலைகள் 

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, G, GX, GX+, VX மற்றும் ZX என ஐந்து முக்கிய டிரிம் லெவல்களைக் கொண்டுள்ளது. உபகரணங்களின் பட்டியலைத் தவிர, இந்த வேரியண்ட்கள் அவற்றின் சீட் கொள்ளளவு (7 அல்லது 8 சீட்கள்) மற்றும் கலர் ஆப்ஷன்களிலும் வேறுபடுகின்றன. இன்னோவா கிரிஸ்டாவின் பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியண்ட்கள், மற்ற கலர் ஆப்ஷன்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் பிரீமியம் விலையைக் கொண்டுள்ளன. சமீபத்திய விலை உயர்வில், ZX MT 7S மற்றும் ZX MT 7S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியண்ட்களுக்கு அதிகபட்சமாக ரூ. 33,000 விலை உயர்வு பொருந்தும்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாபுதிய விலைபழைய விலைவித்தியாசம்
GX 7S19.9519.7223,000
GX 8S19.9919.7722,000
GX + 7S21.4121.1426,000
GX + 8S21.4721.227,000
VX 7S25.2424.9331,000
VX 8S25.2924.9831,000
ZX 7S29.9629.6333,000

அனைத்து விலைகளும் லட்சம் ரூபாயில் (எக்ஸ் சோரூம்)

Continues below advertisement

இரண்டாவது அதிகபட்ச விலை உயர்வான ரூ. 31,000, VX MT 7S, VX MT 8S, VX MT 7S Platinum White Pearl மற்றும் VX MT 8S Platinum White Pearl வேரியன்ட்களுக்குப் பொருந்தும். ரூ.27,000 விலை உயர்ந்த இன்னோவா கிரிஸ்டா வேரியன்ட்களில் GX+ MT 8S மற்றும் GX+ MT 8S Platinum White Pearl ஆகியவை அடங்கும். இந்த வேரியன்ட்களின் 7-சீட்  எடிஷனின் விலை ஒவ்வொன்றும் ரூ. 26,000 அதிகரித்துள்ளது. 

இன்னோவா கிரிஸ்டாவின் கீழ்நிலை மாடல்களில் விலை உயர்வு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. GX MT 7S அல்லது GX MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ. 23,000 செலுத்த வேண்டியிருக்கும். GX MT 8S மற்றும் GX MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலைகள் ரூ. 22,000 உயர்த்தப்பட்டுள்ளன. சதவீத அடிப்படையில், இன்னோவா கிரிஸ்டாவின் இந்த சமீபத்திய விலை உயர்வு சுமார் 1.12% முதல் 1.23% வரை உள்ளது. 

விலைகள் உயர்த்தப்பட்டிருந்தாலும், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவில் புதிய அம்சங்களோ அல்லது இயந்திர மேம்பாடுகளோ அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI