மேலும் அறிய

Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்

Toyota Hyryder 7 Seater SUV: இந்திய கார் சந்தைக்கான ஹைரைடர் கார் மாடலின் 7 சீட்டர் எடிஷனின் சாலை பரிசோதனையை, டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

Toyota Hyryder 7 Seater SUV: டொயோட்டா  ஹைரைடர் கார் மாடலின் 7 சீட்டர் எடிஷனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஹைரைடருக்கு 7 சீட்டர் ஆக ப்ரமோஷன்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா, புதிய 7 சீட்டர் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. குறிப்பாக அவை குறிப்பிட்ட ப்ராண்ட்களின் க்ராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்களின் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக இருக்கும் என கூறப்பட்டது. புதிய ப்ரீமியம் மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவி ஆனது, க்ராண்ட் விட்டாரவை சார்ந்து இருக்கும் என்பதை மாருதி சுசூகி ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், டொயோட்டா நிறுவனம் தனது ஹைரடரின் 7 சீட்டர் எடிஷனுக்கான, சாலை பரிசோதனையை தொடங்கியுள்ளது. இந்த எஸ்யுவி லடாக்கில் சாலை சோதனையில் ஈடுபட்டபோது புகைப்படத்தில் சிக்கியுள்ளது.

ஆல்-வீல் ட்ரைவ் ஆப்ஷன் இருக்குமா? போட்டியாளர்கள்..

சோதனையின் போது காணப்பட்ட மாடலானது, நிலையான ஹைரைடர் காரை காட்டிலும் கூடுதல் நீளம் கொண்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட பின்புறமானது கூடுதல் இருக்கைகளை பொருத்துவதற்கு போதுமான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. டிசைன் விவரங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் விதமாக முற்றிலும் மறைக்கப்பட்டு இருந்தாலும், ரியர் ஆக்‌ஷல் ஷாஃப்ட் இருப்பது இதில் ஆல்-வீல் ட்ரைவ் அம்சம் இடம்பெறுவதற்கான சாட்சியாக கருதப்படுகிறது. மாருதி க்ராண்ட் விட்டாராவின் 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் மட்டுமே, தற்போதைய சூழலில் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் அமைப்பை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் சந்தையில் ஹைரைடர் 7 சீட்டரானது விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள 7 சீட்டர் ரெனால்ட் டஸ்டர் மற்றும் மாருதி க்ராண்ட் விட்டாரா ஆகியவற்றோடு சேர்த்து, ஏற்கனவே சந்தையில் உள்ள மஹிந்த்ராவின் XUV 7XO, டாடா சஃபாரி மற்றும் ஹுண்டாய் அல்கசார் ஆகிய மாடல்களுடனும் போட்டியிட உள்ளது.


Toyota Hyryder SUV: சிக்கிருச்சு..! ஹைரைடருக்கு 7 சீட்டர் ப்ரமோஷன் - ஹைப்ரிட் AWD ஆப்ஷன்? ப்ரீமியம் எஸ்யுவி அம்சங்கள்

ஹைரைடர் 7 சீட்டர் - ப்ரீமியம் அம்சங்கள்

டொயோட்டா ஹைரைடர் 7 சீட்டர் கார் மாடலின் உட்புறமானது, அதன் சகோதரரான 5 சீட்டர் எடிஷனின் அம்சங்களை பெரும்பாலும் அப்படியே கொண்டிருக்குமென கூறப்படுகிறது. அதன்படி, எஸ்யுவி ஆனது சிஸ்டல் அக்ரிலிக் க்ரில், மெல்லிய இரட்டை அடுக்கு பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், அலாய் வீல்கள், கதவில் ஹைப்ரிட் பேட்ஜ், இரட்டை C - வடிவிலான  எல்இடி எலிமெண்ட்களுடன் மெல்லிய C - வடிவிலான டெயில் லேம்ப்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

கூடுதலாக சேர்க்கப்பட உள்ள மூன்றாவது வரிசை இருக்கைகளை தவிர்த்து, கேபின் லே-அவுட் மற்றும் அம்சங்கள் ஆகியவை 5 சீட்டரிலிருந்து அப்படியே தொடரப்படலாம். அதேநேரம், இதனை தனித்துவமானதாக மாற்றுவதற்காக, புதிய ட்ரிம்கள், அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷன்கள் மற்றும் புதிய உட்புற தீம் ஆகிய ஆப்ஷன்களை டொயோட்டா முன்னெடுக்கலாம்.

ஹைரைடர் 7 சீட்டர் - ஹைப்ரிட் ஆப்ஷன்

5 சீட்டர் டொயோட்டா ஹைரைடரானது தற்போதைய சூழலில் 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் இன்ஜினை கொண்டுள்ளது. இதன் மூலம் 92bhp மற்றும் 122Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதோடு, 79bhp மற்றும் 141Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இதோடு, 1.5 லிட்டர் K15C பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதிகபட்சமாக 103bhp மற்றும் 137Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 

ஹைரைடர் 7 சீட்டர் - விலை, வெளியீடு

டொயோட்டா ஹைரைடரின் 7 சீட்டர் எடிஷன் வரும் அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. அப்போது இதன் விலை 21 லட்சத்தில் தொடங்கி 26 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சாலை பரிசோதனை தொடங்கியுள்ளதை அடுத்து, வரும் நாட்களில் கார் தொடர்பான பல்வேறு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

டொயோட்டா ஹைரைடர் 7 சீட்டர் மாடல் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

டொயோட்டா ஹைரைடரின் 7 சீட்டர் எடிஷன் வரும் அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைரைடர் 7 சீட்டர் மாடலில் ஆல்-வீல் ட்ரைவ் அம்சம் இருக்குமா?

சோதனையின் போது காணப்பட்ட மாடலில் ரியர் ஆக்ஷல் ஷாஃப்ட் இருப்பது, ஆல்-வீல் ட்ரைவ் அம்சம் இடம்பெறுவதற்கான சாட்சியாக கருதப்படுகிறது.

ஹைரைடர் 7 சீட்டர் மாடலின் உட்புற அம்சங்கள் என்ன?

7 சீட்டர் எடிஷனின் உட்புறமானது, 5 சீட்டர் எடிஷனின் அம்சங்களை பெரும்பாலும் அப்படியே கொண்டிருக்கும். புதிய ட்ரிம்கள், அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் உட்புற தீம் சேர்க்கப்படலாம்.

ஹைரைடர் 7 சீட்டர் மாடலின் இன்ஜின் விருப்பங்கள் யாவை?

இது 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டார் அல்லது 1.5 லிட்டர் K15C பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்
XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
Mahindra Scorpio N on EMI: நீங்க ரூ.50,000-க்கு மேல சம்பாதிக்குறீங்களா.? அப்போ கம்பீரமான ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; EMI பிளான் இதோ
நீங்க ரூ.50,000-க்கு மேல சம்பாதிக்குறீங்களா.? அப்போ கம்பீரமான ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; EMI பிளான் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்
Pentagon Warns Trump.?: ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
Top 10 News Headlines: சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
Embed widget