Toyota Car Price Hike: கார் விலையை தாறுமாறா ஏத்திய டொயோடோ! எந்த காருக்கு எவ்வளவு ரூபாய் ஏறுது?
Toyota Car Price Hike: டொயோடோ நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் விற்பனை நிறுவனங்களில் ஒன்று டொயோடோ. டொயோடோ நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பிறகு கடந்தாண்டு பிற்பகுதியில் கார்களின் விலை சரிந்தது.
விலையை ஏற்றிய டொயோட்டோ:
இந்த நிலையில், கார்களின் விலையை உயர்த்துவதாக டொயோடோ நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோடோ நிறுவனத்தின் எந்தெந்த கார்கள் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
| கார் | ஆரம்ப விலை (தற்போதைய நிலவரப்படி) | எவ்வளவு உயரப்போகிறது? |
| Fortuner | ரூ.42.97 லட்சம் | ரூ.69 ஆயிரம் |
| Innova Crysta | ரூ.23.96 லட்சம் | ரூ.39 ஆயிரம் |
| Innova Hycross | ரூ.23.96 லட்சம் | ரூ.54 ஆயிரம் |
| Urban Cruiser Hyryder | ரூ.24.41 லட்சம் | ரூ.5 ஆயிரம் |
| Glanza | ரூ.8.23 லட்சம் | ரூ.20 ஆயிரம் |
| Taisor | ரூ.8.94 லட்சம் | ரூ.20 ஆயிரம் |
| Hilux | ரூ.35.50 லட்சம் | ரூ.56 ஆயிரம் |
| Land Cruiser 300 | ரூ.2.73 கோடி | ரூ.2.16 லட்சம் |
டொயோடோ நிறுவனம் அறிவித்துள்ள கார்களில் கிளான்சா, டெய்சர் கார்கள் பட்ஜெட் விலை கார்கள்ஆகும். கிளான்சா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கார்களின் விலையையும் உயர்த்துவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. கிளான்சா காரின் விலையை ரூபாய் 20 ஆயிரமும், டெய்சர் காரின் விலையை ரூபாய் 20 ஆயிரமும் உயர்த்தியுள்ளது.
டொயோட்டோ நிறுவனத்தின் புகழ்பெற்ற ஃபார்ச்சுனர் காரின் தொடக்க விலையே ரூபாய் 42.97 லட்சம். இந்த காரின் விலையை ரூபாய் 69 ஆயிரம் உயர்த்தியுள்ளனர். மேலும், டொயோட்டோ நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு காரான Land Cruiser 300 காரின் விலை ரூபாய் 2.73 கோடி ஆகும். இந்த காரின் விலையை ரூபாய் 2.16 லட்சம் ஆகும்.
2 சதவீதம் வரை உயர்வு:
டொயோட்டோ நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்தும் என்று கருதப்படுகிறது. குறைந்தபட்சம் 0.10 சதவீதம் முதல் அதிகபட்சம் 2 சதவீதம் வரை விலையை டொயோட்டோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் டொயோட்டோ நிறுவனம் தங்களது Urban Cruiser Ebella காரின் விலையை அறிவிக்க உள்ளது. டொயோடோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள முதல் மின்சார கார் இதுவாகும். இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 543 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.
ட்ரெண்டிங் செய்திகள்





















