மேலும் அறிய

சார்ஜ் போட்டா போதும்.. ஊர் சுத்தலாம்! டிவிஎஸ் முதல் ஓலா வரை.. கலக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்ட் இதோ

நவீன தொழில்நுட்பத்தால் உருவான இந்த ஸ்கூட்டர்கள் இன்று ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நேற்றுவரை பெட்ரோல் வண்டிகளை மட்டுமே நம்பியிருந்த மக்கள், இன்று மின்சார வாகனங்களை நோக்கித் திரும்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை உயர்வு ஒருபுறம் என்றால், அரசு வழங்கும் ஊக்கத்தொகை மறுபுறம் முக்கிய காரணமாக அமைகிறது. தற்போதைய சூழலில் சந்தையில் சுமார் 63-க்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகன மாடல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பெட்ரோல் வாகனங்களோடு ஒப்பிடுகையில் மின்சார வாகனங்களின் பராமரிப்புச் செலவு மிகக் குறைவு என்பது ஒரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதுமட்டுமின்றி, இவை சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. நவீன தொழில்நுட்பத்தால் உருவான இந்த ஸ்கூட்டர்கள் இன்று ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

டிவிஎஸ் மோட்டார்ஸ்

மின்சார வாகனப் போட்டியில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் (iQube) சீரிஸ் மூலம் முன்னணியில் உள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் 1,20,653 ரூபாய் ஆகும். இதில் 3.1kWh மற்றும் 3.5kWh என இரண்டு விதமான பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை 12 முதல் 145 கிலோமீட்டர் வரையிலான மைலேஜை வழங்குகின்றன. இந்த வரிசையில் அடுத்துள்ள ஐக்யூப் எஸ் மற்றும் எஸ்டி மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இதில் உயர்தர மாடலான ஐக்யூப் எஸ்டி 5.3 kWh பேட்டரியுடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இதனுடைய விலை 1,77,309 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நல்ல ரேஞ்ச் எதிர்பார்க்கும் நபர்களுக்கு 158 கிலோமீட்டர் மைலேஜ் தரும் டிவிஎஸ் ஆர்பிட் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

பஜாஜ் சேத்தக்

பஜாஜ் நிறுவனம் தனது அடையாளமான சேத்தக் பிராண்டை எலக்ட்ரிக் வடிவில் மீண்டும் கொண்டு வந்து வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் சேத்தக் 3001 முதல் சி3501 வரை பல்வேறு மாடல்கள் கிடைக்கின்றன. இவற்றின் ரேஞ்ச் 127 கிலோமீட்டர் முதல் 153 கிலோமீட்டர் வரை அமைகிறது. இதன் விலையானது 1,11,785 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

ஏத்தர் எனர்ஜி

இளைஞர்களின் ஃபேவரைட் பிராண்டான ஏத்தர், தனது ரிட்சா மற்றும் 450எக்ஸ் மாடல்கள் மூலம் சந்தையைக் கலக்கி வருகிறது. குறிப்பாக குடும்பத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் 20-க்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மைலேஜ் 123 கிமீ முதல் 159 கிமீ வரை உள்ளது. இதனுடைய அதிகபட்ச விலை 1,87,641 ரூபாய் ஆகும். ஸ்போர்ட்டி லுக் தேடுபவர்களுக்காக ஏத்தர் 450எக்ஸ் மாடலில் 6.4kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இது 161 கிமீ ரேஞ்ச் தருகிறது. அதேபோல் ஏத்தர் 450எஸ் மாடல் 1,31,574 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, இதுவும் 161 கிமீ ரேஞ்ச் கொண்ட வேரியண்ட்டை கொண்டுள்ளது.

ஹீரோ விடா

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டும் சந்தையில் கடும் போட்டியை உருவாக்கி வருகிறது. விடா விஎக்ஸ்2 மாடல் 142 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது, இதன் விலை 1,06,872 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. அதேபோல் விடா வி2 ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் அதிகபட்சமாக 165 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றன.

ஓலா எலக்ட்ரிக் மற்றும் பிற மாடல்கள்

ஓலா எஸ்இசட் மாடல் 64,343 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது, இது 46 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது. இதுதவிர 'எஸுவி' என்று அழைக்கப்படும் ரிவர் இண்டி ஸ்கூட்டர் 163 கிமீ ரேஞ்ச் தருகிறது, இதன் விலை 1,54,893 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. யமஹா இசி06 மாடல் 169 கிமீ ரேஞ்சையும், கொமாகி எஸ்இ அல்ட்ரா மாடல் சுமார் 418 கிமீ ரேஞ்சையும் தருவதாகத் தெரிவிக்கின்றன. மிகக் குறைந்த விலையில் 140 கிமீ ரேஞ்ச் தரும் செலோ ஜப் மாடலின் விலை 49,110 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

உங்களது பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விரும்பினால் தற்போது சந்தையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகச்சிறந்த வாய்ப்பாகும். டிவிஎஸ் ஐக்யூப் போன்ற நம்பகமான மாடல்களோ அல்லது ஏத்தர் ரிட்சா போன்ற நவீன வசதிகள் கொண்ட ஸ்கூட்டர்களோ உங்களது பயண அனுபவத்தையே மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாங் ட்ரைவ் போகனுமா? மாஸா கெத்தா போக Yezdi Adventure! விலை எப்டி?
லாங் ட்ரைவ் போகனுமா? மாஸா கெத்தா போக Yezdi Adventure! விலை எப்டி?
Hyundai Exter: 28KM மைலேஜ் வழங்கும் காரை ரூ.9,451 EMI-க்கு கொடுக்கும் ஹுண்டாய் - மொத்த பட்ஜெட் விவரங்கள்
Hyundai Exter: 28KM மைலேஜ் வழங்கும் காரை ரூ.9,451 EMI-க்கு கொடுக்கும் ஹுண்டாய் - மொத்த பட்ஜெட் விவரங்கள்
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Tata Tiago Facelift: டாடாவோட க்யூட் கார் இன்னும் க்யூட்டா வருது.! புது அம்சங்களோட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் எப்போ அறிமுகம்.?
டாடாவோட க்யூட் கார் இன்னும் க்யூட்டா வருது.! புது அம்சங்களோட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் எப்போ அறிமுகம்.?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு
அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதுக்கோட்டை முதலிடம்! வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
Odisha young couple | நடுரோட்டில் சரமாரி தாக்குதல்! LOVER-க்காக உதைவாங்கிய பெண்! பதறவைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Ministers: 59 ஆண்டுகளுக்கு பிறகு! விஜய் ஆட்சியில் அமைச்சராகும் கதர்சட்டைMLA-க்கள் - யார்? யார்? என்ன பதவி?
Congress Ministers: 59 ஆண்டுகளுக்கு பிறகு! விஜய் ஆட்சியில் அமைச்சராகும் கதர்சட்டைMLA-க்கள் - யார்? யார்? என்ன பதவி?
IPS Transfer: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு புதிய ஐஜி! 15 ஐபிஎஸ் அதிகாரிகளை அடியோடு மாற்றிய முதலமைச்சர்!
IPS Transfer: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு புதிய ஐஜி! 15 ஐபிஎஸ் அதிகாரிகளை அடியோடு மாற்றிய முதலமைச்சர்!
அல்வா கொடுத்த விஜய்! இபிஎஸ் பக்கம் தாவ தயாரான சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள்! அதிமுக-வில் இனி ட்விஸ்ட்தான்!
அல்வா கொடுத்த விஜய்! இபிஎஸ் பக்கம் தாவ தயாரான சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள்! அதிமுக-வில் இனி ட்விஸ்ட்தான்!
Rahul Slams Modi: “'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
“'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
Modi Meloni Melody: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
US Iran War: “மறுபடியும் தாக்குனா அமெரிக்காவுக்கு பல சர்ப்ரைஸ் காத்திருக்கு“ அப்பாஸ் அரக்சி பகிரங்க எச்சரிக்கை
“மறுபடியும் தாக்குனா அமெரிக்காவுக்கு பல சர்ப்ரைஸ் காத்திருக்கு“ அப்பாஸ் அரக்சி பகிரங்க எச்சரிக்கை
RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?
Embed widget