Tata Sierra: டாடா சியாரா காரை வாங்க தூண்டும் 8 அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடாவின் முற்றிலும் புதிய சியாரா கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் நவம்பர் 25ம் தேதி, டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சியாரா கார் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதை முன்னிட்டு அந்த காரானாது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரில் உள்ள அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து ப்ராண்ட் தரப்பில் எந்தவித அறிக்கையும் இல்லாவிட்டாலும், இந்த எஸ்யுவியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே போதுமான அளவிலான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சியாரா காரை வாங்க தூண்டும் விதமாக அதில் உள்ள 8 பிரதான வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

Continues below advertisement

சியாராவை வாங்க தூண்டும் 8 அம்சங்கள்:

1. ட்ரிபிள் ஸ்க்ரீன் - செட்டப்

சியாராவின் உட்புறத்தில் இடம்பெற்றுள்ள 3 ஸ்க்ரீன் செட்-அப் ஆனது கவனத்தை ஈர்க்கும் டேஷ்போர்ட் லே-அவுட்டாக உள்ளது. அதன்படி ஓட்டுனருக்கான டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சக முன் இருக்கை பயணிக்கான ஸ்க்ரீன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இந்த வசதியை பெறும் முதல் காராகவும், டாடா மோட்டார்ஸ் தரப்பில் இந்த வசதியை பெற்றுள்ள முதல் காராகவும் சியாரா திகழ்கிறது. இந்த ஸ்க்ரீன்களானது கனெக்டட் கார் தொழில்நுட்பம், பில்ட்-இன் ஆப்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

2. லெவல் 2 ADAS

டாடாவின் முதன்மையான கார்களான ஹாரியர் மற்றும் சஃபாரியை போலவே சியாராவிலும் லெவல் 2 ADAS தொழில்நுட்ப பேக்கேஜ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி ப்ரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் என பல அம்சங்களும் உள்ளடங்கும் என கூறப்படுகிறது.

3. பனோரமிக் சன்ரூஃப்

மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் உள்ள பெரும்பாலான கார்கள் பனோரமிக் சன்-ரூஃபை கொண்டிருப்பதால், சியாராவிலும் இந்த அம்சம் இருப்பது கட்டாயமாகியுள்ளது. அதன்படி இந்த காரில் பெரிய பனோரமிக் க்ளாஸ் ரூஃப் உடன் வருகிறது. இது கண்ணாடியை பின்வாங்கும்போது கேபினுக்குள் இருக்கும் இடத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் மேம்படுத்துகிறது.

4. 360 டிகிரி பார்கிங் கேமரா 

போட்டியாளர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக சியாராவிலும் 360 டிகிரி பார்கிங் கேமரா இடம்பெற்றுள்ளது. இன்றைய சூழலில் இது கட்டாயம் இடம்பெற வேண்டிய பாதுகாப்பு அம்சமாக உருவெடுத்துள்ளது. மிகவும் நெருக்கடியான பார்கிங் பகுதிகளில் இந்த கேமராவானது ஓட்டுனருக்கு கூடுதல் கண்ணாக செயல்படுகிறது.

5. டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது முற்றிலும் புதிய சியாராவில் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஓட்டுனருக்கும், அவருடன் அமர்ந்திருக்கும் சக முன் இருக்கை பயணிக்கும் இரண்டு வெவ்வேறு விதமான வெப்பநிலையை பராமரிக்க முடியும்.இந்த தொழில்நுட்ப அம்சமானது ஹாரியர் மற்றும் சஃபாரியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

6. எலெக்ட்ரானிக் டெயில்கேட்

டாடா சியாராவில் இடம்பெற்றுள்ள எலெக்ட்ரானின் டெயில்கேட்டானது, இந்த காரை போட்டியாளர்களிடமிருந்து தனித்துவமானதாக மாற்றுகிறது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மாருதி சுசூகி விக்டோரிஸ் மற்றும் டாடா கர்வ் ஆகிய இரண்டு கார்கள் மட்டுமே இந்த அம்சத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

7. அட்ஜெஸ்டபள் அன்டர் தை சப்போர்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த செக்மெண்டில் முதல்முறையாக முன் இருக்கையில், அட்ஜெஸ்டபள் அன்டர் தை சப்போர்ட் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் உயரமாக இருப்பவர்களும் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். மேனுவலாக செயல்படுத்த வேண்டியிருந்தாலும், நல்ல பலன் அளிக்கக் கூடியதாக இருப்பதால் கவனத்தை ஈர்த்துள்ளது.

8. 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்

டாடா சியாராவில் டால்பி அட்மாஸ் உடன் கூடிய 12 ஸ்பீக்கர் ப்ரீமியம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டமானது டேஷ்போர்ட் மவுண்டட் சோனிக்‌ஷாஃப்ட் சவுண்ட்பார் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள், சியாராவை பாதுகாப்பானதாகவும், சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் காராகவும் மாற்றுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI