மேலும் அறிய

Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?

Upcoming 7 Seater EV ICE: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming 7 Seater EV ICE: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன் என அடுத்தடுத்து 5 சீட்டர் கார் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டட உள்ளன.

அடுத்தடுத்து சந்தைக்கு வரும் 7 சீட்டர் கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஒரு மாதத்திலேயே, அடுத்தடுத்து 5 புதிய 7 சீட்டர் கார் மாடல்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. இதில் பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் எடிஷன் வரையில், இன்ஜின் தொடங்கி மின்சார மாடல்களும் அடங்கும். அந்த வகையில் உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள 7 சீட்டர் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய 7 சீட்டர் கார்கள் - இன்ஜின் டூ EV

1. எம்ஜி மெஜஸ்டர்

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எம்ஜி மெஜஸ்டர் அடிப்படையில், க்ளோஸ்டரின் ஸ்போர்டியர் வெர்ஷனாகும். இது வரும் பிப்ரவரி 12ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கார் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகத நிலையில், இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 216bhp மற்றும் 479Nm ஆற்றலை உற்பத்தி செய்ய ஏதுவாக, 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர்  ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டிருக்குமாம்.

உட்புறத்தில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 12.3 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிம் சன்ரூஃப், பவர்ட் டெயில்கேட், ஹீடட் & பவர்ட் முன்புற இருக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 முதல் ரூ.46 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?

2. நிசான் க்ராவைட்

நிசானின் குறைந்த விலை 7 சீட்டர் கார் மாடலான க்ராவைட் வரும் பிப்ரவரி 17ம் தேதி சந்தைப்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. கட்டமைப்பில் ட்ரைபரின் ஷீட் மெடலை பயன்படுத்தினாலும், நிசானின் டிசைன் மொழியை கொண்டுள்ளது. இந்த எம்பிவி-யில் புதிய V-மோஷன் முன்புற க்ரில், சில்வை ஹைலைட்களுடன் கூடிய ஸ்போர்டியர் பம்பர், பானெட்டில் க்ராவைட் நேம்ப்ளேட், பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், புதிய முகப்பு விளக்குகள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

மவுண்டட் கன்ட்ரோல்ஸ் உடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் அகற்றக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் எதிர்பார்க்கப்படுகிறது. 1.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் உடன் கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் தொடங்கி ரூ.9 லட்சம் வரை நீடிக்கக் கூடும்.


Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?

3. ஃபோக்ஸ்வான டெய்ரன் ஆர்-லைன்

ஃபோக்ஸ்வாகன் தரப்பில் இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்ட டிகுவான் கார் மாடலின் 7 சீட்டர் எடிஷனாக டெய்ரன் ஆர்-லைன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு ரூ.51,000 என்ற கட்டணத்துடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு வரும் இந்த காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர்  டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற உள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.3 விநாடிகளில் எட்டும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெய்ரன் ஆர்-லைன் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற உள்ளது. அதில் பெரிய 15 இன்ச் மைய டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச்  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஹெட்-அப் டிஸ்பிளே, 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், மெமரி ஃபங்க்சனுடன் கூடிய வெண்டிலேடட் & பவர்ட் முன்புற இருக்கை, ஹீட்டிங் & மசாஜ் ஃபங்க்சன்ஸ், ஆம்பியண்ட் லைட்டிங் என பல அம்சங்களும் இடம்பெறக்கூடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதன் விலை ரூ.48 முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.


Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?

4. மெர்சிடஸ் பென்ஸ் V-க்ளாஸ்

உள்நாட்டு சந்தையில் டொயோட்டா வெல்ஃபையர் மாடலுக்கு போட்டியாக மெர்சிடஸ் பென்ஸ் V-க்ளாஸ் கார் வரும் மார்ச் 3ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடலானது ப்ராண்டின் புதிய க்ரில், பெரிய பின்புற கண்ணாடி பகுதி, வெர்டிகலி ஸ்டேம்ப்ட் டெயில் லேம்ப்கள், டயமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்லைடிங் இரண்டாவது வரிசை கதவுகள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் இந்த ப்ரீமியம் எம்பிவி ஆனது பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்டை கொண்ட டூயல் டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.  காருக்கான ஆற்றல் உற்பத்திக்காக 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின், 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த காரின் விலை ரூ.1.10 கோடி தொடங்கி ரூ.1.25 கோடி வரை நீள்கிறது.


Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?

5. வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன்

உள்நாட்டு சந்தையில் கியா நிறுவனத்தின் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலுக்கான நேரடி போட்டியாக வின்ஃபாஸ்டின் லிமோ க்ரீன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், தீவிரமான விலை பட்டியலை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60.13KWh பேட்டரி பேக்கை கொண்டு, 450 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80KW டிசி சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் 30 நிமிடங்களில் 10 முதல் 70 சதவிகித சார்ஜிங்கை எட்ட முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி வெளியாகத நிலையில், இதன் விலை 19 லட்சத்தில் தொடங்கி 30 லட்சம் வரை நீளும் என கூறப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த மாதம் என்ன எதிர்பார்க்கலாம்?

அடுத்த ஒரு மாதத்தில் 5 புதிய 7 சீட்டர் கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்களும் அடங்கும்.

எம்ஜி மெஜஸ்டர் பற்றிய முக்கிய அம்சங்கள் யாவை?

எம்ஜி மெஜஸ்டர், பிப்ரவரி 12 அன்று விற்பனைக்கு வர உள்ளது. இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நிசான் க்ராவைட் இன்ஜின் மற்றும் விலை வரம்பு என்ன?

நிசான் க்ராவைட், பிப்ரவரி 17 அன்று சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பங்கள் கிடைக்கும். இதன் விலை ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை இருக்கலாம்.

ஃபோக்ஸ்வான டெய்ரன் ஆர்-லைன் எப்போது வரும்?

ஃபோக்ஸ்வான டெய்ரன் ஆர்-லைன் ஏற்கனவே முன்பதிவில் உள்ளது. இதில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறும்.

மெர்சிடஸ் பென்ஸ் V-க்ளாஸ் விலை என்னவாக இருக்கும்?

மெர்சிடஸ் பென்ஸ் V-க்ளாஸ், மார்ச் 3 அன்று சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ. 1.10 கோடி முதல் ரூ. 1.25 கோடி வரை இருக்கலாம். இது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் வரும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Gautam Gambhir:
Gautam Gambhir: "ரெண்டு பேருக்கு தான் இந்த கப் சொந்தம்" டார்கெட் செய்த கோச், ஜெய் பாய்க்கு நன்றி - கம்பீர் பேச்சு
Embed widget