Top 5 Tata Cars for Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாடா கார் மாடலகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மைலேஜில் மிரட்டும் டாடா கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களில் கிடைக்கக் கூடிய, மிக முக்கிய அம்சமாக எரிபொருள் செயல்திறன் கருதப்படுகிறது. ஆனால், மைலேஜ் மட்டுமின்றி பொறாமைப்படத்தக்க கட்டமைப்பு மற்றும் சக்தியை கொண்ட வாகனங்கள் மூலம், டாடா நிறுவனம் புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு களம் அமைத்தன. வசதியான பயணம் ஆனாலும் சரி, சிறந்த மைலேஜ் ஆனாலும் சரி எந்தவொரு தேவைக்கும் டாடாவிடம் சிறந்த கார் மாடல்கள் உள்ளன. அந்த வகையில், நடப்பாண்டில் இந்திய சந்தையில் அதிகம் மைலேஜ் தரக்கூடியதாக உள்ள டாடாவின் டாப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. டாடா டியாகோ சிஎன்ஜி

எரிபொருள் செயல்திறன் சார்ந்த கார் ஒன்றை வாங்க விரும்புபவர், டாடாவின் டியாகோ சிஎன்ஜி எடிஷனை பரிசீலிக்காமல் இருக்க முடியாது. தினசரி பயன்பாட்டிற்கு இதனை விட ஒரு சிறந்த தேர்வை காண்பது அரிது. ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை வெறும் 5 லட்சத்தில் இருந்து தொடங்கிறது. 1.2 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ள இந்த காரானது, சர்வதேச பாதுகாப்பு பரிசோத்னையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. கார் வாங்குப்வர் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இந்த கார் மதிப்பை வழங்கும்.

2. டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி

ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி எடிஷன், சிறப்பான செயல்திறன் மட்டுமின்றி நல்ல மைலேஜையும் வழங்குகிறது. அதன்படி, ஒரு கிலோவிற்கு 26.2 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையானது வெறும் 6.89 லட்சத்தில் தொடங்குவதோடு, பயணிகளுக்கும், உடைமைகளுக்கும் போதுமான இடவசதியை கொண்டுள்ளது. வசதி, மாடர்ன் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை இந்த காரை சிறந்த தேர்வாக மாற்றுகின்றன. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் இந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. டாடா நெக்ஸான் டீசல்

எஸ்யுவி காரை ஓட்டவேண்டும் ஆனால் எரிபொருள் செயல்திறனில் எந்த குறையும் இருக்கக் கூடாது என விருன்புவோருக்கு, டாடா நெக்ஸானின் டீசல் வேரியண்ட் நல்ல தேர்வாக இருக்கும். இந்த காரானது லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி செக்மெண்டில் அதிக மைலேஜ் தரக்கூடிய கார்களில் ஒன்றாக உள்ளது. 8 லட்ச ரூபாய் என்ற தொடக்க விலையை கொண்டுள்ள இந்த காரானது, கட்டுமஸ்தான உடலமைப்புடன் வலுவான தோற்றத்தை பெற்று, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை ஈட்டியுள்ளது.

4. டாடா பஞ்ச் சிஎன்ஜி

டாடாவின் பஞ்ச் கார் மாடலானது அதன் சிஎன்ஜி எடிஷனிற்கு சற்றே கூடுதலாக ஆடம்பரங்களை வெளிப்படுத்துகிறது. அதோடு, ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆக கவனத்தை ஈர்க்கிறது. இதன் விலை 6 லட்சத்தில் தொடங்கி 10.32 லட்சம் வரை நீள்கிறது. இந்த காரில் உயரமான இருக்கை அமைவிடம், விசாலமான உட்புற இடவசதி மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங்கை வழங்குகிறது.

5. டாடா டைகோர் சிஎன்ஜி

டாடாவின் காம்பேக்ட் செடான் மாடலான டைகோர் சிஎன்ஜி காரானது, கவர்ச்சிகரமான மற்றும் நல்ல எரிபொருள் செயல்திறன் கொண்ட கலவையாகும். இந்த வாகனம் ஒரு கிலோவிற்கு 26.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு இந்த கார் ஒரு சிறந்த உழைப்பாளியாக இருக்கும். வெறும் 7.5 லட்சம் விலையில் தொடங்கும் இந்த காரானது பெரிய இடவசதி மற்றும் சிறப்பான இண்டீரியர் அம்சங்களை பெற்றுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI