Kia Carens | கியா கேரன்ஸ் கார் மாடலை ஏன் வாங்க வேண்டும்? டாப் 5 காரணங்கள் இதோ... 

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கேரன்ஸ் என்ற மாடலை நாளை வெளியிடவுள்ள நிலையில், அதன் விலை நிர்ணயம் குறித்து பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Continues below advertisement

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கேரன்ஸ் என்ற மாடலை நாளை வெளியிடவுள்ள நிலையில், அதன் விலை நிர்ணயம் குறித்து பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். SUV, MPV ஆகிய மாடல்களின் கலவையாக சுமார் 6 முதம் 7 பேர் வரை அமரும் வசதிகொண்ட இந்த மாடல் 2 பெட்ரோல் எஞ்சின்களிலும், 1 டீசல் எஞ்சினிலும் வெளிவருகிறது. ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சுரி, லக்சுரி ப்ளஸ் ஆகிய ஆப்ஷன்களிலும் கியா கேரன்ஸ் வெளியிடப்படுகிறது. 

Continues below advertisement

கியா கேரன்ஸ் கார் மாடலை ஏன் வாங்க வேண்டும்? டாப் 5 காரணங்கள் இதோ... 

1. கியா கேரன்ஸ் மாடலின் மிகப்பெரிய ப்ளஸ் என்பது அதன் வெளிப்புற டிசைன். அதன்  முன்பக்கம் முந்தைய மாடலான செல்டோஸ் காரை விட அதிக வேறுபாடுள்ள தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லாம்ப், டிஆரெல் ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட்டிருப்பதோடு, க்ளோஸ் கறுப்பு நிற மேற்பரப்பையும் கொண்டுள்ளது. இதன் வீல்களின் அளவு 16 இன்ச் என்பது மிகக் குறைவானது என்ற போது, அதன் முன்பக்க லுக் அதிகம் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது. 

2. கியா கேரன்ஸ் மாடலின் மற்றொரு சிறப்பம்சம் அதன் இண்டீரியர் டிசைன். அதன் டேஷ்போர்ட் பல்வேறு லேயர்களாகப் பிரிந்துள்ளதோடு, அதில் 10.25 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பட்டன்களும் டிஜிட்டலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

3. மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இந்த மாடலில் மூன்றாவது வரிசை சீட்டில் அமர, ஒரு பட்டன் அழுத்தினால் எலக்ட்ரானிக் உதவியுடன் மடங்கும் சீட் பொருத்தப்பட்டிருக்கிறது. மூன்றாவது வரிசையிலும் அமர்வதற்கு ஏற்றவாறு இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நடுவில் இருக்கும் வரிசையிலும் இட வசதி அதிகமாக இருந்தாலும், ஓட்டுநரின் சீட்டிற்குப் பின் பக்கத்தில் ஏர் ப்யூரிஃபயர் பொருத்தப்பட்டிருப்பதால் ஓட்டுநருக்குப் பின்னால் அமர்பவருக்கான இடம் மட்டும் சிறிது குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

4. கியா கேரன்ஸ் மாடலில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களும் உண்டு. 64 வண்ணங்களில் ஒளிரும் ambient lighting, Bose audio system, connected car technology, air purifier, sunroof, 6 ஏர் பேக்ஸ் கொண்ட சீட்கள் ஆகியவை இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன. 

5. கியா கேரன்ஸ் மாடலில் இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் ஆகிய மூன்று வகையிலான எஞ்சின்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரை ஓட்டுவதற்கான வசதியை மேம்படுத்துகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola