Affordable Diesel Cars: மைலேஜ்னாலே டீசல் கார்கள் தான்.. கொறஞ்ச விலையில் கிடைக்கும் மாடல்கள் - டாப்பில் டாடா
Affordable Diesel Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் டீசல் கார்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Affordable Diesel Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 டீசல் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மலிவு விலை டீசல் கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடுமையான உழிழ்வு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்கள் கூட தங்களது மலிவு விலை டீசல் கார்களின் உற்பத்தியை கைவிட்டுள்ளது. அதேநேரம், மஹிந்திரா, டாடா, ஹுண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள், வேறுபட்ட டிசைன் அமைப்புகளுடன் சில டீசல் ஆப்ஷன்களை சந்தையில் கொண்டுள்ளன. அந்த வகையில் உள்நாட்டு சந்தையில் மலிவு விலையில் தற்போதும் கிடைக்கும் சில மின்சார கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5. கியா சோனெட்:
கியாவின் போர்ட்ஃபோலியோவில் சைரோஸிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள சோனெட், நிறுவனத்தின் சார்பில் விற்பனையாகும் மற்றொரு சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆகும். இதில் 116bhp மற்றும் 250NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 19 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை 10 லட்ச ரூபாயில் தொடங்கி 15.74 லட்சம் வரை நீள்கிறது. மலிவு விலையில் தரமான மைலேஜ் அம்சம் மிகுந்த காரை வாங்க விரும்புவோருக்கு சோனெட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் 3 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது.
4. மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திராவின் XUV 3XO எஸ்யுவி ஆனது ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. இதன் மூலம் போட்டித்தன்மை மிக்க விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட எஸ்யுவி வாகனத்தில் மலிவு விலையில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட ஒரே கார் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. இதில் 117bhp மற்றும் 300NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், அதிகபட்சமாக 17 முதல் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விலை 9.99 லட்சம் முதல் 14.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என, இரண்டு தரப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
3. மஹிந்திரா பொலெரோ நியோ/நியோ+
மஹிந்திராவின் பொலேரோவானது நியோ மற்றும் 9 இருக்கை அம்சங்களை கொண்ட நியோ+ என இரண்டு எடிஷன்களில் கிடைக்கிறது. முதல் எடிஷனில் 100bhp மற்றும் 260NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது எடிஷனில் 120bhp மற்றும் 280NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 2.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் ட்ரான்ஸ்மிஷன் பணிகள் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ்களால் வழங்கப்படுகின்றன. லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. நியோ எடிஷனின் விலை 9.97 லட்சம் தொடங்கி 12.18 லட்சம் வரையிலும், நியோ+ எடிஷனின் விலை 11.41 லட்சம் முதல் 12.51 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒட்டுமொத்தமாகவே பாதுகாப்பு பரிசோதனையில் ஒரு ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது.
2. மஹிந்திரா பொலேரோ
இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மிக நீண்டகாலமாக விற்பனையில் உள்ள கார் மாடல் என்ற பெருமை மஹிந்திராவின் பொலேரோவையே சேரும். இதில் 76bhp மற்றும் 210NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கார், லிட்டருக்கு சுமார் 16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விலை ரூ.9.81 லட்சம் முதல் ரூ.10.93 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரும் ஒட்டுமொத்தமாகவே பாதுகாப்பு பரிசோதனையில் ஒரு ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது.
1. டாடா ஆல்ட்ரோஸ்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் டீசல் கார் என்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் டீசல் எடிஷனில் கிடைக்கும் ஒரே ஹேட்ச்பேக் என்ற பெருமையும் டாடா ஆல்ட்ரோஸையே சேரும். இதில் 90bhp மற்றும் 200NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. ஆல்ட்ரோஸின் டீசல் எடிஷன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. லிட்டருக்கு சுமார் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படும் இந்த காரின் விலை, ரூ.8.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.29 லட்சம் வரை நீள்கிறது. இந்த கார் பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பிரிவில் 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.




















