மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரியை குறைப்பதாக அறிவித்தது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய விலை குறைப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவும் தனது கார்களின் விலைய குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றம் காரணமாக விலை குறைந்துள்ள மஹிந்திரா எஸ்யூவி கார்கள் எது? எது? என்பதை கீழே காணலாம்.
1. Mahindra XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல காராக Mahindra XUV 3XO உள்ளது. இது ஒரு subcompact SUV கார் ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த காரின் விலை ரூபாய் 1.56 லட்சம் ஆகும். Mahindra XUV 3XO காரின் தொடக்க விலை ரூபாய் 7.99 லட்சம முதல் ரூபாய் 15.80 லட்சம் வரை உள்ளது. இதன் விலை ரூபாய் 1.56 லட்சம் வரை குறைக்கப்படுகிறது. சன்ரூஃப் மேற்கூரை கொண்டது. கிளைமேட் கன்ட்ரோல் உள்ளது. 10.25 இன்ச் டிஸ்ப்ளேஸ் இந்த கார் உள்ளது. 360 டிகிரி கேமரா இதில் உள்ளது. 2 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
2. Mahindra Scorpio N:
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பு Scorpio N ஆகும். ஸ்கார்ப்பியோ என் பிரபலமான எஸ்யூவி கார் ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக இந்த காரின் விலை ரூபாய் 1.45 லட்சம் வரை குறைக்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூபாய் 13.99 லட்சம் முதல் ரூபாய் 25.15 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதன் கேபின் மிக அருமையாக உள்ளது. 8 இன்ச் டச் ஸ்கிரீன் இதில் உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் இந்த காரில் உள்ளது. சோனி 3டி சவுண்ட் சிஸ்டம் இதில் உள்ளது.
3. Mahindra XUV700:
மஹிந்திரா நிறுவனத்தின் Mahindra XUV700 கார் மிகவும் பிரபலம் ஆகும். பல வசதிகளை கொண்ட Mahindra XUV700 காரின் விலை ரூபாய் 1.43 லட்சம் வரை ஜிஎஸ்டி வரி குறைப்பால் குறைய உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 14.49 லட்சம் முதல் ரூபாய் 25.14 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த காரின் விலை குறைய உள்ளது. 360 டிகிரி கேமரா வசதியும், சன்ரூஃப் மேற்கூரையும் கொண்ட இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் திறன் கொண்டது ஆகும்.
4. Mahindra Thar (3-door):
மஹிந்திரா நிறுவனத்தின் கம்பீரமான படைப்பாக Thar. 3 கதவுகள் கொண்ட Mahindra Thar காரின் விலை ஜி.எஸ். டி. வரி காரணமாக ரூபாய் 1.35 லட்சம் வரை குறைய உள்ளது. சாதாரண பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஓட்டுவதற்கு மிகவும் ஏற்ற காராக இந்த கார் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.50 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 17.62 லட்சம் வரை விற்கப்படுகிறது.
7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, கூகுள் மேப் உள்ளிட்ட பல அதிநவீன வசதியுடன் ஆட்டோமெட்டிக் கிளேமேட் கன்ட்ரோலுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர்.
5. Mahindra Thar Roxx:
மஹிந்திரா காரின் கம்பீரமான படைப்பாக Mahindra Thar Roxx உள்ளது. மஹிந்திரா தாரின் அப்டேட் வெர்சனாக Mahindra Thar Roxx உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 12.99 லட்சம் முதல் ரூபாய் 23.29 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 1.33 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது.
தார் ராக்ஸ்சில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 10.25 இன்ச் டிஸ்ப்ளே வசதி உள்ளது.
மேலே கூறிய கார்கள் அனைத்தும் மஹிந்திராவின் அதியற்புதமான படைப்புகளாக இந்த கார்கள் உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக கார்களின் விலை குறைய இருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI