இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாளுக்கு நாள் மவுசு ஏறுகிறது. இது பட்ஜெட்டாகவும் அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். அதனாலேயே இ ஸ்கூட்டர்கள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசு இ ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டமும் நாட்டில் இ வாகனச் சந்தையை மேம்படுத்த வேண்டும் என்பது தான். அரசு அளிக்கும் ஊக்கத்தாலி ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றனர். இந்திய வாகனச் சந்தையில் இ ஸ்கூட்டரின் இப்போது மவுசு, ரேட் என்னவென்பதை அறிவோம்.

ஓலா எலெக்ட்ரிக்

* ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்கள் கடந்த ஆகஸ்ட் 15 என்று அறிமுகப்படுத்தப்பட்டது.* ஓலா எலெக்ட்ரிக் S1 விலை ரூ.99,999 என்றும்  S1 Pro விலை ரூ.1,21,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.* இந்த ஸ்கூட்டரில் 750W போர்ட்டபிள் சார்ஜர் உள்ளது* இது முழுமையாக சார்ஜாக 2.9Wh பேட்டரியை பயன்படுத்துகிறது. 6 மணி நேரத்தில் சார்ஜாகிவிடுகிறது.*இந்த ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் 118 கி.மீ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பஜாஜ் சேட்டக்

* பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.42 லட்சம் விலைக்கு விற்பனையாகிறது. இதே நிறுவனம் தனது ப்ரீமியம் வெரைட்டியை ரூ.1.44 லட்சத்துக்கு விற்பனை செய்கிறது.* ஈகோ மோட் ஸ்கூட்டர் 95 கி.மீ பயணிக்கக் கூடியது.* இதில்  2.9 kWh பேட்டரி உள்ளது. இது 5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும்.

ஆதர் 450X

* இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 116 km.* இதன் ஷோரூம் விலை ரூ.1.32 லட்சம்.* இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ* இது  61kWh பேட்டரி கொண்டுள்ளது. 3 மணி நேரம் 35 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகிவிடுகிறது.

சிம்பிள் ஒன்

* இது அண்மையில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.* இது  4.8kWh பேட்டரி கொண்டுள்ளது. மோட் E வசதி கொண்டுள்ளது.*  மோட் E ஆப்ஷனில் இயக்கும்போது இது 236 கி.மீ பயணிக்கிறது.* இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.09 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஷோரூம் விலை.

டிவிஎஸ் ஐகியூப் 

* டிவிஎஸ் ஐகியூப்  (Tvs iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 75 கி.மீ ரேஞ்ச் கொண்டது.* இதன் விலை ஷோரூமில் ரூ.1.15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.* இது 4 kWh பேட்டரி கொண்டுள்ளது. 5 மணி நேரத்தில் 80% சார்ஜ் ஏறுகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI