Budget Cars: இந்திய ஆட்டோமொபல் சந்தையில் மூத்த குடிமக்களுக்கான ஆட்டோமேடிக் கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்களுக்கான கார்கள்:


கார்கள் வசதி படைத்தவர்களுக்கானது என்ற சூழல் மாறி, நடுத்தர மக்களிடையே அதன் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. அப்படி வாங்கப்படும் கார்களில் வாடிக்கையாளர்கள் பல்வேறு அம்சங்களை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக மேனுவல் வாகனங்களை கையாள்வதில் உள்ள சிரமங்களை தவிர்க்க, மூத்த குடிமக்கள் ஆட்டோமேடிக் கார்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இந்திய சந்தையில் மூத்த குடிமக்களுக்கான, மலிவு விலை ஆட்டோமேடிக் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


5. மாருதி சுஸுகி வேகன் ஆர்


மாருதி சுசுகி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆட்டோமேடிக் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.6.49 லட்சம் ஆகும். இது 66.08 மற்றும் 89 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன்,  5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 21.79 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


4. மாருதி சுசுகி செலிரியோ:


மாருதி சுசுகி செலிரியோ விஎக்ஸ்ஐ அட்டோமேடிக் பெட்ரோல் வேரியண்டின் விலை ரூ.6.33 லட்சம் ஆகும். இது 66.08 மற்றும் 89 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர்,  நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. அதனுடன் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


மேலும் படிக்க: Hyundai Discount: ஆஃபரை அள்ளிபோட்டு அறிவித்த ஹுண்டாய் - பல மாடல்களுக்கு ரூ.48 ஆயிரம் வரை தள்ளுபடி


3. மாருதி S-Presso:


மாருதி S-Presso VXi ஆட்டோமேடிக் பெட்ரோல் வேரியன்ட்டின் விலை ரூ.5.71 லட்சம். இது 66.08 மற்றும் 89 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 5-ஸ்பீடு ஆடோமேடிக் கியர்பாக்ஸ் உடன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 25.3 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


2. மாருதி சுசுகி ஆல்டோ கே10:


மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ ஏஎம்டி பெட்ரோல் வேரியன்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.56 லட்சம். இது 66:08 மற்றும் 89 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 1.0 எல் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 24.9 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


1. ரெனால்ட் க்விட்:


ரெனால்ட் க்விட் 1.0L RXL ஆட்டோமேடிக் பெட்ரோல் வேரியண்டின் விலை ரூ.5.45 லட்சம் ஆகும். இது 67.06 மற்றும் 91 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 1.0 L நேட்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. மேலும், 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI