இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்களை இந்த  தொகுப்பில் அறியலாம்.


மின்சார வாகனங்கள்:


அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மின்சார வாகன பயன்பாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும், மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் சில மின்சார கார்களின் விவரங்களை ஏற்கனவே பார்த்தோம். அதைதொடர்ந்து தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


Ather 450X:


பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியாகி பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வாகனம் ஏதர் 450எக்ஸ். இதன் விலை 3.7 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியுடன்6 kW த்றன் கொண்ட மின்சார மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 146 கிலோ மீட்டர் தூரம் வரைய்ல் பயணிக்கக் கூடிய, இந்த வாகனத்தின் விலை தொடக்க விலை ரூ. 1.28 லட்சம் எனவும், அதிகபட்ச வ்லை ரூ.1.49 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


TVS iQube:


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மின்சார வாகனமான ஐக்யூப் இந்திய சந்தையில் ஸ்டேண்டர்ட், எஸ் மற்றும் எஸ்டி எனும் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.  5.1 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை கொண்ட இந்த வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த மைலேஜ் வேரியண்ட் அடிப்படையில் மாறுபடும். இதன் தொடக்க விலை ரூ. 1.22 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.1.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Ola S1 / S1 Pro:


மிகவும் நுட்பமான வடிவமைப்பிற்காக பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ஓலாவின் S1 சீரிஸ் பைக்குகள். 3 kWh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ள ஓலா S1 ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 141 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். 4 kWh திறன் கொண்ட S1 Pro ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் 181 கிலோ மிட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.1.30 லட்சம் எனவும், அதிகபட்ச விலை ரூ.1.4 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Bajaj Chetak:


இந்த பட்டியலில் அடுத்ததாக இருப்பது ரெட்ரோ டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜின் சேடக் ஸ்கூட்டர். இதில் 3 kWh லித்தியம் அயன் பேட்டரியுடன் 3.8 kW திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் எகோ மோடில் 95 கிலோ மீட்டர் தூரமும், ஸ்போர்ட் மோடில் 85 கிலோ மீட்டர் தூரமும் மைலேஜ் தரும்.  இதன் விலை ரூ. 1.44 லட்சம் என ந்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Hero Vida V1 Pro:


இந்த பட்டியலில் கடைசியாக இருப்பது ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 ப்ரோ. 3.94 kWh பேட்டரியுடன் 6kW மோட்டாரையும் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 165 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.1.26 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI