Bike For Short Riders: உயரம் குறைந்தவர்களும் வசதியாக பயணிக்க உதவும் 5 இருசக்கர வாகன மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உயரம் குறைந்தவர்களுக்கு ஏற்ற பைக் மாடல்கள்:
இருசக்கர வாகன பயணத்தில் சொகுசான பயணம் மற்றும் சிறந்த கையாளும் திறன் என்பது, சரியான இருக்கை மூலம் மட்டுமே இறுதி செய்யப்படுகிறது. இருக்கையிலேயே அமர்ந்தபடியே இரண்டு கால்களையும் தரையில் வைக்கவும் வழிவகை செய்யும் வாகனங்களே, நெரிசலான பகுதி அல்லது போக்குவரத்து நிறுத்தங்களில் வாகனத்தை எளிதில் கையாள முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. பல பிராண்டுகள் மலிவு விலையிலான மாடல்களை வழங்குகின்றன. அவை உயரம் குறைவானவர்களுக்கு சரியான தேர்வாகவும், நம்பிக்கையுடன் வாகனத்தை ஓட்டலாம் என்ற மனநிலையையும் உருவாக்கி கொடுக்கின்றன. அந்த வகையிலான மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மலிவு விலையில் டாப் சாய்ஸ்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் என்பதை தரவரிசையில் அடிப்படையிலானது அல்ல. இருக்கை உயரம் அடிப்படையிலானது மட்டுமே ஆகும்.
1. பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160
பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலானது 737 மில்லி மீட்டர் உயரத்திலான வசதியான இருக்கையை கொண்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கான இந்த பைக்கானது 169 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் ஆயிரத்து 490 மில்லி மீட்டர் வீல்பேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்ட அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலானது, 160சிசி இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350
ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 மாடலின் தொடக்க விலையானது ரூ.1.96 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 170 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 400 மில்லி மீட்டர் வீல் பேஸ் உடன் 765 மில்லி மீட்டர் இருக்கை உயரத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கூடுதல் வசதியான பயணத்தை பெறுகின்றனர். 349சிசி ஏர் ஆயில் கூல்ட் இன்ஜினை கொண்டு, நிஜ உலக பயன்பாட்டில் 32 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
3. டிவிஎஸ் ரெய்டர் 125
டிவிஎஸ் ரெய்டர் 125 மாடலானது 780 மில்லி மீட்டர் உயர இருக்கையை கொண்டுள்ளது. இதனால் குறைந்த தூர பயணங்களுக்கான சரியான தேர்வாக இந்த வாகனம் உள்ளது. 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 326 மில்லி மீட்டர் வீல் பேஸ் உடன் டிவிஎஸ் ரெய்டர் 125 வடிவமைக்கப்பட்டுள்ளது. 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்ட் இன்ஜினை கொண்டுள்ள இந்த வாகனமானது, 56 முதல் 67 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ.82 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளில் ஒன்றான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ரூ.74,902 என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 97.2 சிசி ஏர் கூல்ட் இன்ஜினை கொண்டு, 60 முதல் 80 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. 165 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 236 மில்லி மீட்டர் வீல் பேஸ் மற்றும் 785 மில்லி மீட்டர் இருக்கை உயரத்துடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. ஹோண்டா SP 125
ஹோண்டாவின் SP 125 மோட்டார் சைக்கிளின் தொடக்க விலையானது 87 ஆயிரத்து 878 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இந்த வாகனமானது 790 மில்லி மீட்டர் உயரத்தில் இருக்கையை கொண்டுள்ளது. 160 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 285 மில்லி மீட்டர் வீல் பேஸ் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 123.94 சிசி SI இன்ஜினை கொண்டு லிட்டருக்கு 63 முதல் 65 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI