Skoda Cars: பஞ்சமில்லாத ஸ்கோடா மாடல்கள்.. பாதுகாப்பு, கம்ஃபர்ட் & ப்ரீமியம் இன்டீரியர் - டாப் 4 கார்கள்
Skoda Cars 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் 4 சிறந்த கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Skoda Cars 2025: ஸ்கோடா நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் 4 சிறந்த கார் மாடல்களின் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஸ்கோடா கார் மாடல்கள்:
பாதுகாப்பான மற்றும் தரமான செயல்திறன் கொண்ட கார்களை வழங்குவதன் மூலம், ஸ்கோடா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா என ஆச்சரியப்படும் அளவிற்கு, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நம்பமுடியாத உயர் தொழில்நுட்பங்களை பெற்ற ஸ்கோடா கார்கள் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கார்களில் மேற்கொள்ளப்படும் தினசரி பயணம் என்பது சிரமமற்றதாகவும், வசதியானதாகவும் உணரப்படுகிறது. அந்த வகையில் ஸ்கோடா நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் 4 சிறந்த கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஸ்கோடா குஷக்:
ஸ்கோடா நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் எஸ்யுவிக்களின் பட்டியலில் குஷக் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எனும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கடினமான வழிகளைத் தவிர மற்ற எல்லா வழிகளிலும் வசதியாகப் பயன்படுத்த இது போதுமானது. பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ப்ரீமியம் உட்புறங்கள், 10 இன்ச் டச்ஸ்க்ரீன், ஸ்மார்ட்போன் கனெக்ஷன் மற்றும் ஆட்டோக்ளைமேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை ரூ.13.19 லட்சத்தில் தொடங்கி ரூ.22.89 லட்சம் வரை நீள்கிறது.
2. ஸ்கோடா ஸ்லாவியா 1.5 TSI
நிறுவனத்தின் மிட்-சைஸ் செடான் ஆன ஸ்லாவியா 1.5 TSI, ஆதிவேகமான ஆக்சிலரேஷனை வழங்கக் கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. 7 ஸ்பீட் DSG கியர்பாக்ஸை பயன்படுத்துகிறது. ஸ்லாவியா ஓட்டுவதற்கு வேடிக்கையானது குறிப்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த சாலைகளில் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதளை வழங்குகிறது. வயர்லெஸ் கனெக்ஷனுடன் கூடிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் பெரிய 521-லிட்டர் பூட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை ரூ.11.73 லட்சத்தில் தொடங்கி ரூ.21.84 லட்சம் வரை நீள்கிறது.
3. ஸ்கோடா கோடியாக்
மேம்படுத்தப்பட்ட கோடியாக் எடிஷனானது ஐரோப்பிய ஆடம்பரத்தையும் குடும்ப நடைமுறைத்தன்மையையும் இணைக்கும் தொழில்நுட்பம் நிறைந்த, 7 சீட்டர் ப்ரீமியம் SUV ஆகும். 7 ஸ்பீட் DSG மற்றும் நிலையான ஆல்-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்ட வலுவான 2.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. உயர்தர பொருட்கள் மற்றும் முதல் இரண்டு வரிசைகளில் சிறந்த இருக்கை வசதியுடன் கூடிய ஆடம்பர உணர்வை கேபின் வழங்குகிறது. மூன்றாவது வரிசை இருக்கைகள் குழந்தைகள் அல்லது குறுகிய பயணங்களுக்கு சிறந்தது. ஆனால் இருக்கை நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அனைத்து பின்புற இருக்கைகளையும் மடித்து பூட்டை 281 லிட்டரிலிருந்து மிகப்பெரிய 1,976 லிட்டராக உயர்த்தலாம். குறிப்பிடத்தக்க அம்சங்களில் 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் காக்பிட், காற்றோட்டம் மற்றும் மசாஜ் முன் இருக்கைகள் மற்றும் 13-ஸ்பீக்கர் கேண்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை ரூ.50.51 லட்சத்தில் தொடங்கி ரூ.57.97 லட்சம் வரை நீள்கிறது.
4. ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா நிறுவனம் சார்பில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிறிய காராக, காம்பேக்ட் எஸ்யுவி ஆன கைலாக் திகழ்கிறது. இதில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 4 பயணிகளுக்கு பொருத்தமான விசாலமான இடவசதியுடன் 446 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. பின்புற இருக்கைகளை மடிப்பதன் மூலம், அதனை ஆயிரத்து 265 லிட்டராக உயர்த்த முடியும். காரை ப்ரீமியமாக மாற்றும் வகையில் டாப் வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவிற்கான வயர்லெஸ் இணைப்புடன் கூடிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்க்ரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை ரூ.8.87 லட்சத்தில் தொடங்கி ரூ.15.76 லட்சம் வரை நீள்கிறது.





















