கார்கள் வாங்கும்போது அதன் பிக்கப், மைலேஜ், விலை என்பதை எந்தளவு பார்க்கிறோமோ அதே அளவு அந்த காரில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் பயணிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். 

Continues below advertisement

அந்த வகையில் குறைந்த அளவு பட்ஜெட் காரில் அதாவது வெறும் 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் நல்ல தரமான பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்கள் டாப் 4 கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Nissan Magnite:

நிஸான் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான படைப்பாக Nissan Magnite உள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இதில் 6 ஏர்பேக்ஸ் உள்ளது.  இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளது. 360 டிகிரி கேமரா உள்ளது. 

Continues below advertisement

இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் உள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி ரக காரான இதன் தொடக்க விலை ரூபாய் 6.14 லட்சம் ஆகும்.

2. Maruti Suzuki Dzire:

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Maruti Suzuki நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Maruti Suzuki Dzire ஆகும்.  Dzire-ன் 4த் ஜென் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. இதன் அடிப்படை மாடல் ரூபாய் 6.84 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும்.  

இதில் 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி சிஸ்டம், 3 பாய்ண்ட் சீட்பெல்ட், உள்ளது. செடான் ரக காரான இதில் 5 பேர் வரை பயணிக்கலாம். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.111.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

3.Tata Punch

கார் தயாரிப்பு நிறுவனங்களில் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் காராக திகழ்வது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக திகழ்வது Tata Punch ஆகும். டாடா பஞ்ச் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 4 ஸ்டார் ரேட்டிங் கொண்டது.

டாடா பஞ்ச்சின் ப்யூர் மற்றும் ப்யூர் ஓ பெட்ரோல் மாடல்கள் 7 லட்சத்திற்கும் குறைவானது ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 பேர் பயணிக்கலாம். டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. இதில் 37 லிட்டர் தாங்கும் பெட்ரோல் டேங்க் உள்ளது.

4. Tata Altroz:

டாடா நிறுவனத்தின் மற்றொரு தரமான படைப்பு Tata Altroz. பட்ஜெட் விலையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் இது. இந்த காரில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரம் 5 ஸ்டார் ரேட்டிங்கில் உள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரம் 3 ஸ்டார் ரேட்டிங்கில் உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 6.89 லட்சம் ஆகும்.

ஹேட்ச்பேக் காரான இந்த காரில் 5 பேர் வரை பயணிக்கலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் உள்ளது. இது 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும். டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. 6 கியர் மற்றும் 5 கியர் வசதியில் இந்த கார் உள்ளது. 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி இதில் உள்ளது. 

மேலே கூறிய கார்களுக்கு அந்தந்த கார் நிறுவனங்கள் அவ்வப்போது சலுகை அளிப்பார்கள். இதனால், மேலே கூறிய விலையை காட்டிலும் பல ஆயிரங்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI