Best Selling SUV Hyundai Creta: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்யுவிக்களின் பிரிவில் கடுமையாக முயன்றும் விக்டோரிஸ் மற்றும் செல்டோஸ் மாடல்களால் முதலிடம் பிடிக்க முடியவில்லை.

Continues below advertisement

மிட்-சைஸ் எஸ்யுவி - க்ரேட்டாவின் ஆதிக்கம்

இந்திய கார் சந்தையில் எஸ்யுவி வாகனங்களின் விற்பனை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மிட்-சைஸ் பிரிவு அதிகப்படியான போட்டித்தன்மையை கொண்டுள்ளது. அடுத்தடுத்து ஏராளமான மாடல்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட ஆப்ஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும், தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்தின், அறிமுகமாகி 10 ஆண்டுகளை கடந்த க்ரேட்டா கார் மாடலானது மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பிரிவில் கடந்த மார்ச் தொடங்கி மே மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும், 48 ஆயிரத்து 364 யூனிட்களுடன் க்ரேட்டா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் இந்த கார் சார்பில் விற்பனையாகின்றன. 

Continues below advertisement

மற்ற எஸ்யுவிக்களின் நிலை என்ன்?

இந்த பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் மாடலானது, 35 ஆயிரத்து 616 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கியா செல்டோஸ் ஆனது 3 மாதங்களில் 32 ஆயிரத்து 204 யூனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், ஹுண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியாவும், தனது செல்டோஸ் மாடலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 யூனிட்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தை பிடித்துள்ள டொயோட்டா ஹைரைடரானது மார்ச் தொடங்கி மே மாதம் வரையிலான காலகட்டத்தில் 27 ஆயிரத்து 985 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

மிட்-சைஸ் எஸ்யுவிக்களின் 3 மாத விற்பனை:

கார் மாடல்கள்மார்ச் - 2026ஏப்ரல் - 2026மே - 2026மொத்த விற்பனை
ஹுண்டாய் க்ரேட்டா17,83815,29115,23548,364
மாருதி விக்டோரிஸ்11,06213,70110,85335,616
கியா செல்டோஸ்11,04110,56610,59732,204
டொயோட்டா ஹைரைடர்10,2069,1158,66427,985
மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா6,7467,7189,36623,830
டாடா சியாரா90037,3166,60622,925
ஸ்கோடா குஷக்2,3071,8511,3105,468
 ரெனால்ட் டஸ்டர்1,4022,3591,2675,028 
டாடா கர்வ்1,6021,4031,6804,685
ஃபோக்ஸ்வாகன் டைகன்9081,5431,2813,732

லிஸ்டில் வந்த ரெனால்ட் டஸ்டர்:

டொயோட்டா ஹைரைடரின் ரீபேட்ஜ் வெர்ஷனான மாருதி க்ராண்ட் விட்டாராவின் 23 ஆயிரத்து 830 யூனிட்கள் கடந்த மூன்று மாதங்களில் விற்பனையாகியுள்ளது. விக்டோரிஸ் மாடலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் க்ராண்ட் விட்டாராவின் விற்பனை சரிந்துள்ளது.  டாடா சார்பில் அதிகபட்சமாக சியாரா 22 ஆயிரத்து 925 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டஸ்டர் மீண்டும் சந்தைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முதல்முறையாக இந்த பட்டியலில் ரெனால்டின் டஸ்டர் இடம்பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக ஃபோக்ஸ்வாகனின் டைகன் மாடலானது மார்ச் தொடங்கி மே வரையிலான மூன்று மாதங்களில் வெறும் 3 ஆயிரத்து 732 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: Tata Sierra: நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்

க்ரேட்டாவை விரும்பும் மக்கள்:

கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹுண்டாய் க்ரேட்டா, ஒரு தசாப்தத்திற்கு பிறகும் உள்ளூர் சந்தையில் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அறிமுகமான க்ரேட்டாவின் இரண்டாவது தலைமுறை மாடல், 2024ம் ஆண்டில் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது. ரூ.10.91 லட்சத்தில் தொடங்கி ரூ.20.06 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார எடிஷன்களி, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் க்ரேட்டாவை வாங்க முடியும். ப்ரீமியம் தோற்றம், விலைக்கு நிகரான அம்சங்கள் நிறைந்த உட்புறம், நம்பகத்தன்மையான ப்ராண்டுடன் கூடிய வசதியான பயணம், நடைமுறைக்கு உகந்த டிசைன், பரவலான சேவை மையங்கள் மற்றும் மறுவிற்பனையில் சிறந்த மதிப்பு ஆகியவற்றுடன் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக விளங்குவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி க்ரேட்டாவை தேர்வு செய்கின்றனர். 


Car loan Information:

Calculate Car Loan EMI