இந்திய வாகன சந்தையில் வரவிருக்கும் ஆண்டுகளில் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் போட்டி மிகக் கடுமையாக மாற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, JSW நிறுவனம் புதிய எஸ்யூவி வாகனங்களுடன் களமிறங்கத் தயாராகி வருகிறது.

Continues below advertisement

இந்நிறுவனத்தின் ஜேகூ J5 (Jaecoo J5) மாடல் கார் சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனையின்போது காணப்பட்டது. சுமார் 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எஸ்யூவி வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே மாடல்தானா?

இந்திய சந்தையில் JSW நிறுவனத்தின் திட்டங்கள் ஒரு மாடலோடு முடிந்துவிடவில்லை. Jetour T2 அடிப்படையிலான எஸ்யூவி, ஜேகூ J5 மற்றும் செரி iCar V23 உள்ளிட்ட பல மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து தனது சந்தையை விரிவுபடுத்தவுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா, ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்றவற்றுடன் இது நேரடியாகப் போட்டியிடும்.

Continues below advertisement

வடிவமைப்பை பொறுத்தவரை, சோதனையில் இருந்த கார் மறைக்கப்பட்டிருந்ததால் முழுமையான வடிவமைப்பு தெரியவில்லை. இருப்பினும், உலகளாவிய சந்தையில் உள்ள J5 மாடலை இது பெருமளவு ஒத்திருக்கும் என்று தெரிகிறது.

ஹைப்ரிட் மாடலா

இதில் வித்தியாசமான ஹெட்லைட்டுகள், பெரிய கிரில், கவர்ச்சியான டெயில்லைட்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லர் இடம்பெறும். சோதனையில் காணப்பட்ட மாடலின் கிரில்லில் செங்குத்தான ஸ்லாட்டுகள் இருந்ததால் இது ஹைப்ரிட் மாடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது; இதன் எலக்ட்ரிக் மாடல் முழுவதும் மூடப்பட்ட கிரில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இதன் ஹைப்ரிட் மாடல் 1.83 kWh மோட்டாருடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும். இது 224 bhp பவர் மற்றும் 295 Nm டார்க் திறனை வழங்கும். இது மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், மாருதி விக்டோரியாஸ் போன்ற ஹைப்ரிட் கார்களுக்கு சவாலாக அமையும். மற்றொரு சாதாரண 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 145 bhp பவர், 210 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். எலக்ட்ரிக் பிரிவில் 58.9 kWh பேட்டரி மூலம் சுமார் 400 கி.மீ ரேஞ்ச் வழங்கும் மாடலையும் நிறுவனம் களமிறக்கும். இருப்பினும், இந்திய மாடலின் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் உலகளாவிய மாடலில் இருந்து சற்று மாறுபடலாம்.

என்னென்ன வசதிகள்?

இந்த காரில் 13.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் சோனி ஆடியோ, டூயல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற வசதிகள் இடம்பெறும். பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், 540-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ADAS வசதியும் வழங்கப்படும். ஹைப்ரிட் கார் மூலம் சிறந்த மைலேஜ் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

விலை எப்படி?

ஜேகூ J5 கார் 2027 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் வெர்ஷனின் மும்பை ஆன்-ரோடு விலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 15 லட்ச விலையில் புதிய கார் தேடுவோருக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI