உலக அளவில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சீனாவின் பிஒய்டி (BYD), தனது புதிய வகை சொகுசு எஸ்யூவி கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

'ஃபியாங் செங் பாவோ' (Fang Cheng Bao) என்ற தனது புதிய துணை பிராண்டின் கீழ், ‘பாவோ 5’ (Bao 5) மற்றும் ‘பாவோ 8’ (Bao 8) ஆகிய இரண்டு பிரம்மாண்டமான மாடல்களை அந்நிறுவனம் தற்போது களமிறக்கியுள்ளது. இந்த கார்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.43 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்?

இந்த புதிய கார்களின் மிக முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது இதன் அதிநவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் தான். சாதாரணமாக 4 சக்கரங்களைக் கொண்ட இந்த காரில், எதிர்பாராத விதமாக ஒரு டயர் வெடித்தாலோ அல்லது முற்றிலும் பழுதடைந்தாலோ கூட, மீதமுள்ள 3 சக்கரங்களை மட்டுமே வைத்து மிக பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். விபத்து காலங்களில் காரின் சமநிலையை இழக்காமல் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த தனித்துவமான தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதில் 'பாவோ 5' மாடல், ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) வாகனமாகும். கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் முரட்டுத்தனமான வெளிப்புறத் தோற்றத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 680 குதிரைத்திறன் ஆற்றலை வெளிப்படுத்தும். வெறும் 4.8 விநாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும் சீற்றமும் இதற்கு உண்டு. பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பேட்டரி என இரண்டின் மூலம் இயங்கும் இந்தக் கார், முழுமையாக சார்ஜ் மற்றும் டேங்க் நிரப்பப்பட்ட நிலையில் சுமார் 1,200 கி.மீ தூரம் வரை பயணிக்கக்கூடிய ரேஞ்சைக் கொண்டுள்ளது. பாவோ 8 எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன அம்சங்கள்

அதேபோல, இதைவிட அளவில் சற்றுப் பெரிய மாடலான 'பாவோ 8', குடும்பத்துடன் நீண்ட தூரம் சொகுசாகப் பயணம் செய்ய ஏற்ற வகையில் மூன்று வரிசை இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் லெதர் இருக்கைகள், ஏடிஏஎஸ் எனப்படும் நவீன பாதுகாப்பு வசதிகள் எனப் பல நவீன அம்சங்கள் நிரம்பியுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் டெஸ்லா போன்ற பெருநிறுவனங்களுக்குக் கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ள பிஒய்டி, இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்களால் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தற்போதைக்கு இந்த பாவோ சீரிஸ் கார்கள் சீனச் சந்தையில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. அங்கு இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர வசதிகளும், 3 சக்கரங்களில் ஓடும் வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் அடங்கிய இந்தக் கார்கள், விரைவில் உலகளாவிய சந்தைகளிலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI