Tata Tigor Xpres Fleet: வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ஏதுவாக, டாடா டைகோர் அடிப்படையிலான Xpress மாடலின் தொடக்க விலை ரூ.5.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டாடா டைகோர் அடிப்படையிலான Xpress 

இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் வாடகை கார்களுக்கான தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் விதமாக, Xpress கார் மாடலை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எடிஷன்களில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மின்சார எடிஷன் ஏற்கனவே பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் போட்டித்தனமை கொண்டதாக, Xpress காரின் பெட்ரோல் எடிஷனின் தொடக்க விலை ரூ.59 லட்சமாகவும், இரட்டை சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.6.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த பிரிவுகளில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வாடகை கார்களுக்கான செடான்களாக இரண்டு கார்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் வாடகை கார்களுக்கான பிரத்யேக விற்பனை நிலையங்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

Continues below advertisement

டாடா Xpress - இன்ஜின், சிஎன்ஜி விவரங்கள்

 Xpress காரின்  பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு வேரியண்ட்களிலுமே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் தான் இடம்பெற்றுள்ளது. அவை இரண்டுமே பிரத்யேகமாக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர சேவை பயணங்களுக்காகவும், நம்பகத்தன்மை மற்றும் வாடகை கார்களுக்காக்வே நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாம். சிஎன்ஜி செக்மெண்டில் இதுவரை இல்லாத வகையில் 70 லிட்டர் ட்வின் சிலிண்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரிவிலேயே மிகப்பெரிய அளவிலான எரிபொருள் டேங்கை கொண்டு இருப்பதோடு, அதிகப்படியான மைலேஜ் வழங்கும் கார் மாடலாகவும் உருவெடுத்துள்ளது.  Xpres CNG எடிஷனின் முக்கிய சிறப்பம்சம் அதன் இரட்டை சிலிண்டர் அமைப்பாகும். இது பயன்படுத்தக்கூடிய பூட் இடத்தைப் பாதுகாக்கிறது.  வழக்கமான CNG செடான்கள் பெரும்பாலும் குறைவாகவே இசவசதியை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா Xpress - வாடகை கார்களுக்கான இடவசதி

போதுமான இடவசதிகளை விசாலமாக கொண்டிடுப்பதால் பயணிகள் தங்களது லக்கேஜ்களை சமரசம் இன்றி எடுத்துச் செல்ல முடியும் என்பதை உறுதி செய்கிறது. இது முன்பதிவு இழப்புகளைக் குறைத்து ஒட்டுமொத்த வருவாயை மேம்படுத்துகிறது. மறுபுறம், பெட்ரோல் வேரியண்டானது 419 லிட்டர் பெட்ரோல் ஃப்ளீட் செடான் பிரிவில் மிகப்பெரிய பூட் வசதியை வழங்குகிறது. உரிமைச் செலவுகளை உறுதியாகக் கட்டுக்குள் வைத்திருக்க, டாடா மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது.

டாடா Xpress - வாரண்டி

எது முதலில் வருகிறதோ அதுவரை என இது ஐந்து ஆண்டுகள் அல்லது 1,80,000 கிமீ வரை நீட்டிக்கப்படலாம். பராமரிப்பு செலவுகள் ஒரு கிமீக்கு ரூ. 0.47 என மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இது வணிக பயன்பாடுகளுக்கு எக்ஸ்பிரஸை மிகவும் செலவு குறைந்த செடான்களில் ஒன்றாக மாற்றுகிறது. விரிவாக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் லைன் - அப்பை ஆதரித்து, டாடா மோட்டார்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பிரத்யேக ஃப்ளீட்-மையப்படுத்தப்பட்ட டீலர்ஷிப்களை உருவாக்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் பிரிவின் கீழ் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகன விருப்பங்கள் மூலம், டாடா இந்தியாவில் மிகவும் விரிவான ஃப்ளீட் செடான் லைன் - அப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI