இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் அசைக்க முடியாத முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடுத்தர மக்களும் எலக்ட்ரிக் காரை வாங்கும் வகையிலான பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா டியாகோ இ.வி. (Tata Tiago EV) மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Continues below advertisement

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் பூர்த்தி செய்யும் வகையிலும், நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியும் இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை டாடா நிறுவனம் இந்தியச் சாலைகளில் களமிறக்குகிறது.

வடிவமைப்புமற்றும்புதியஅம்சங்கள்

புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் பல கவர்ச்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியான டாடா நெக்ஸான் இ.வி. மற்றும் பஞ்ச் இ.வி. கார்களில் உள்ளதைப் போன்ற புதிய பம்பர் மற்றும் முகப்பு வடிவமைப்பு இதில் இடம்பெறுகிறது. முன்புறம் நீளமாக இணைக்கப்பட்ட எல்.இ.டி விளக்குகள் காருக்கு மிகவும் ஸ்போர்ட்டியான பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.

Continues below advertisement

காரின் உட்புறத்தில், டேஷ்போர்டு டிசைனில் மாற்றம் செய்யப்பட்டு, பெரிய அளவிலான 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட உள்ளன.

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அதிநவீன வசதிகளும் இடம்பெறும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக வழங்கப்பட உள்ளன.

பேட்டரிதிறன்மற்றும்ரேஞ்ச்

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோர் பிரதானமாக கவனிப்பது அதன் ரேஞ்ச் எனப்படும் மைலேஜ்தான். இந்த புதிய மாடலிலும் ஏற்கனவே உள்ள அதே இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. எனினும் 24 kWh பேட்டரிக்கு ஆயுள்கால பேட்டரி வாரன்ண்ட்டி அளிக்கப்படுவதால் அதை வாங்குவதே சிறந்தது.

சிறிய பேட்டரி கொண்ட மாடல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரையிலான மைலேஜையும், பெரிய பேட்டரி கொண்ட மாடல் சுமார் 315 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்சையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டிற்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

சிட்டி டிரைவிங் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு டிரைவிங் மோடுகளும் இதில் இடம்பெறும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் காரை வெகு விரைவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

எம்.ஜி. காமெட் மற்றும் சிட்ரோயன் eC3 ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இந்த புதிய டாடா டியாகோ இ.வி ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிறது.

விலை எப்படி?

7 லட்சம் ரூபாய் தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் டாப் மாடல் 9 லட்சம் ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI