Tata Sierra SUV: டாடா சியாரா எஸ்யுவி கார் மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
டாடா சியாரா எஸ்யுவி அறிமுகம்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விண்டேஜ் மாடலான சியாரா, இந்திய எஸ்யுவி கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, நவீன காலத்திற்கு ஏற்ப சியாரா காரை மேம்படுத்தி டாடா நிறுவனம் தற்போது மீண்டும் சந்தைப்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது முதலே எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், அண்மைக்காலமாக இதுதொடர்பான அப்டேட்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அதன் முடிவாக, டாடா சியாரா கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
டாடா சியாரா எஸ்யுவி - விலை, வேரியண்ட்கள்:
நவீனா சியாரா கார் மாடலின் தொடக்க விலை 11 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் இந்த காரை முன்பதிவு செய்யலாம் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் கார்களின் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாராவில் கிடைக்கும் வேரியண்ட்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஸ்மார்ட்+
- ப்யூர்
- ப்யூர்+
- அட்வென்சர்
- அட்வென்சர் +
- அக்கம்ப்ளிஸ்ட்
- அக்கம்ப்ளிஸ்ட் + என மொத்தம் 7 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
டாடா சியாரா எஸ்யுவி - இன்ஜின் ஆப்ஷன்கள்
டாடா சியாரா எஸ்யுவி கார் மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டர்போ இன்ஜின் ஆனது 170hp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் DCA ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டர்போ டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுடன் ஆல் வீல் ட்ரைவ் மற்றும் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
டாடா சியாரா எஸ்யுவி - உட்புற அம்சங்கள்
சியாராவின் உட்புறமானது விசாலமான இடவசதி கொண்ட ப்ளாக் & க்ரே தீமிலான கேபினை கொண்டுள்ளது. இதில் 3 கனெக்டட் ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற்றுள்ளது. அதில் முதலாவது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகவும், இரண்டாவது இன்ஃபோடெயின்மெண்டிற்காகவும், மூன்றாவதாக இருப்பது முன் இருக்கை வரிசையில் உள்ள சக பயணிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வெண்டிலேடட் மற்றும் பவர்ட் முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வாய்ர்லெஸ் சார்ஜிங், ரியர் சன்ஷேட்ஸ் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.
டாடா சியாரா எஸ்யுவி - மற்ற வசதிகள்
கர்வ் காரில் இருக்கும் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் பின்பற்றப்பட்டு இலுமினேடட் லோகோ மற்றும் டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்னாப்ட்ராகன் சிப் மற்றும் 5ஜி ஆதரவுடன் கூடிய iRA கனெக்டட் தொழில்நுட்பம், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், சவுண்ட்பார் உடன் கூடிய 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் செட்-அப், 18 மோட்கள் கொண்ட டால்பி அட்மாஸ், பனோரமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங், ரியர் சன்ஷேட்ஸ், ஹபர் ஹெட்-அப் டிஸ்பிளே ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
டாடா சியாரா எஸ்யுவி - வண்ண விருப்பங்கள்:
டாடா சியாரை காரை வாங்குபவர்கள் ஆறு ஒற்றை வண்ண விருப்பங்களை தேர்வு செய்யலாம். அதில் அந்தமான் அட்வென்சர், பெங்கால் ரூஜ், கூர்க் க்ளவுட்ஸ், மிண்டல் க்ரே, மூனாறு மிஸ்ட் மற்றும் ப்ரிஸ்டன் ஒயிட் ஆகியவை அடங்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI