Tata Sierra Top Variant: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா சியாரா கார் மாடலின், மற்ற வேரியண்ட்களின் விலை டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

Continues below advertisement

டாடா சியாரா எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய சியாரா எஸ்யுவியை அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. காருக்கான முன்பதிவு வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்க, விநியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முடல் தொடங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் சியாரா கார் மாடலின் விலை ரூ.11.49 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சியாரா எஸ்யுவி - வேரியண்ட்கள், விலை

சியாரா எஸ்யுவி கார் மாடலானது ஸ்மார்ட்+, ப்யூர், ப்யூர்+, அட்வென்சர், அட்வென்சர் +, அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட் + என மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.  எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் தற்போது வரை 24 ட்ரிம்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் பேஸ் லெவல் கார் மாடலின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது. வழங்கப்படும் அம்சங்களுக்கு ஏற்ப மற்ற வேரியண்ட்களுக்கான விலை மாறுபடும். டாப் வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.20.49 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம். அதன்படி, இந்த விலைக்கு நிகராக டாப் வேரியண்டில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் என்னென்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

டாடா சியாரா டாப் வேரியண்ட்டிற்கான அம்சங்கள்

  1. கிடைமட்டமாக ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரிபிள் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்
  2. வெல்கம் & குட்பாய் அனிமேஷன்
  3. நைட் சேபர் Bi-LED பூஸ்டர் முகப்பு விளக்கு
  4. ப்ராக்ரசிவ் சைட் இன்டிகேட்டர்ஸ்
  5. காற்று தரக்குறியீடு டிஸ்பிளே உடன் கூடிய பியூரிஃபையர்
  6. கெஸ்டர் கன்ட்ரோல் உடன் கூடிய பவர்ட் டெயில்கேட்
  7. மெமரி மற்றும் வெல்கம் திறனுடன் கூடிய 6 வே பவர்ட் ஓட்டுனர் இருக்கை
  8. 2 ரியர் 65W USB C(மல்டிமீடியா & சார்ஜிங்)
  9. ஆர்கேட் சூட்
  10. ஆட்டோ டிம்மிங் IRVM
  11. ரியர் ஃபாக் லேம்ப்ஸ்
  12. அமேசான் AI
  13. SOS (E-call/B-call)
  14. இன்பில்ட் நேவிகேஷன்

பாதுகாப்பிற்கான லெவல் 2 ADAS

சியாரா எஸ்யுவியின் டாப் வேரியண்டான அக்கம்ப்ளிஸ்ட் +  காரில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள 22 சிறப்புக் கூறுகளை உள்ளடக்கிய லெவல் 2 ADAS வசதி வழங்கப்பட்டுள்ளது.

  • ட்ராஃபிக் சைன் உடன் கூடிய இண்டெலிஜெண்ட் ஸ்பீட் அசிஸ்ட்
  • மேப் வசதியுடன் கூடிய இண்டெலிஜெண்ட் ஸ்பீட் அசிஸ்ட்
  • ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன்
  • லேன் சேஞ்ச் அலெர்ட்
  • ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலெர்ட்
  • ரியர் கொலீசன் வார்னிங்
  • டோர் ஓபன் அலெர்ட்
  • ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர்
  • ஓவர் ஸ்பீட் அலெர்ட்
  • ஸ்டாப் & கோ வசதி கொண்ட அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்     
  • பெடஸ்ட்ரியன் ஃபார்வேர்ட் கொலீசியன் கன்ட்ரோல்
  • கார் ஃபார்வேர்ட் கொலீசியன் கன்ட்ரோல் 
  • சைக்ளிஸ்ட் ஃபார்வேர்ட் கொலீசியன் கன்ட்ரோல்     
  • லேன் டிபார்ட்சுர் வார்னிங்
  • லேன்கீப் அசிஸ்ட்
  • லேன் சென்டரிங் சிஸ்டம்
  • ACC உடன் கூடிய அடாப்டிவ் ஸ்டியரிங் அசிஸ்ட்
  • ஹை பீம் அசிஸ்ட்
  • ட்ராஃபிக் சைன் ரிகக்னைஷன்
  • பெடஸ்ட்ரியன் அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங்
  •  கார் அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங்
  • சைக்ளிஸ்ட் அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங்

iRA கனெக்டட் சூட்

  • பயனருக்கான வெல்கம் மெசேஸ் (வாய்ஸ்)
  • பர்த்டே செலிப்ரேஷன் மோட்
  • கம்யூட் டூ ஹோம்
  • கம்யூட் டூ ஆஃபிஸ்
  • ரிலேக்ஸ் மோட்
  • 5 தனிப்பயனாக்க ஆப்ஷன்களுடன் கூடிய ”மை ஸ்பேஸ்”
  • +73 கனெக்டட் வசதிகள் ஆகியவையும் சியாராவின் டாப் வேரியண்டான அக்கம்ப்ளிஸ்ட் + கார் மாடலில் கிடைக்கும்.

மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகள் அனைத்தும் சியாராவின் மற்ற எந்த வேரியண்டிலும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாரா டாப் வேரியண்ட் - இன்ஜின் ஆப்ஷன்:

சியாரா கார் மாடலில் மொத்தமாக இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டாப் வேரியண்டான அக்கம்ப்ளிஸ்ட் + மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேடிக் & மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்ட டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI