Tata Sierra Booking: டாடா சியாரா கார் மாடலின் வேரியண்ட்களுக்கான இன்ஜின் ஆப்ஷன்களும், அதற்கான விலை பட்டியலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

டாடா சியாரா:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு நவீன காலத்திற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் சியாரா எஸ்யுவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து ஸ்மார்ட்+, ப்யூர், ப்யூர்+, அட்வென்சர், அட்வென்சர்+, அக்கம்ப்ளிஷ்ட் மற்றும் அக்கம்ப்ளிஷ்ட்+  என 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் மொத்த விலை வரம்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.11.49 லட்சத்தில் தொடங்கும் விலையானது டாப் எண்ட் வேரியண்டிற்கு ரூ.21.29 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தனது நேரடி போட்டியாளராக ரூ.10.73 லட்சம் முதல் ரூ.20.20 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கும் க்ரேட்டாவை காட்டிலும் சியாராவின் விலை சற்றே அதிகமாக உள்ளது. ஆனால், விலைக்கு நிகரான அம்சங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

புக்கிங் தொடங்கியாச்சு..

இதனிடையே, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி டாடா சியாரா கார் மாடலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அணுகவதன் மூலமாகவோ, டீலர்ஷிப் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தருவதன் மூலமாகவோ முன்பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக நகரம் மற்றும் டீலர்ஷிப்களை பொறுத்து, ரூ.11 ஆயிரம் முதல் ரூ.51 ஆயிரம் வரை டோக்கன் தொகை செலுத்த வேண்டி இருக்கும். இந்த கார்களானது வரும் ஜனவரி 15ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேரியண்ட்களுக்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும்

வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம்
1.5லி NA பெட்ரோல் MT
ஸ்மார்ட்+ ரூ.11.49 லட்சம்
ப்யூர் ரூ.12.99 லட்சம்
ப்யூர்+ ரூ.14.49 லட்சம்
அட்வென்சர் ரூ.14.49 லட்சம்
அட்வென்சர்+ ரூ.15.99 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட் ரூ.17.99 லட்சம்
1.5லி NA பெட்ரோல் AT
ப்யூர் ரூ.14.49 லட்சம்
ப்யூர்+ ரூ.15.99 லட்சம்
அட்வென்சர் ரூ.16.49 லட்சம்
அட்வென்சர்+ ரூ.17.19 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட் ரூ.18.99 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட்+ ரூ. 20.29 லட்சம்
1.5லி டர்போ பெட்ரோல் DCT
ப்யூர் ரூ.14.49 லட்சம்
ப்யூர்+ ரூ.15.99 லட்சம்
அட்வென்சர் ரூ.16.79 லட்சம்
1.5லி டீசல் MT
அட்வென்சர்+ ரூ.17.99 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட் ரூ. 19.99 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட்+ ரூ. 20.99 லட்சம்
1.5லி டீசல் AT
ப்யூர் ரூ.15.99 லட்சம்
ப்யூர்+ ரூ.17.99 லட்சம்
அட்வென்சர்+ ரூ.18.49 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட் ரூ. 19.99 லட்சம்
அக்கம்ப்ளிஸ்ட்+ ரூ. 21.29 லட்சம்

சியாரா இன்ஜின் விவரங்கள்:

டாடா சியரா எஸ்யுவி கார் மாடலில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் உள்ளன.

  • நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீட் DCT என இரண்டு கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வருகிறது. இது 106PS பவரையும் 145Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
  • 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160PS பவரையும் 255Nm டார்க்கையும் வழங்குகிறது.
  • டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 118PS பவரையும், மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 260Nm பீக் டார்க்கையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 280Nm டார்க்கையும் வழங்குகிறது.

Car loan Information:

Calculate Car Loan EMI