இந்திய சந்தையில் டாடா சியரா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த கார் அனைவராலும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. 90-களில் இந்திய சாலைகளை ஆண்டு, மக்களின் இதயங்களை கவர்ந்த டாடா சியரா, ஒரு புதிய மற்றும் நவீன அவதாரத்தில் மீண்டும் வர தயாராக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது சியரா EV-யின் தயாரிப்புக்குத் தயாரான மாடலின் முதல் அதிகாரப்பூர்வ தோற்றத்தை டாடா மோட்டார்ஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புதிய தோற்றம், கார் பிரியர்களிடையே மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்நிறுவனம், இந்த சக்திவாய்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவியை ஜூன் 30-ம் தேதி முழுமையாக வெளியிட உள்ளது. இந்த பிரிவில் உள்ள வேறு எந்த வாகனமும் வழங்காத அதன் அற்புதமான அம்சங்களே இதன் மிகப்பெரிய தனிச்சிறப்பாக உள்ளது. வரவிருக்கும் சியரா EV பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

புதிய தோற்றம் எப்படி இருக்கிறது.?

மக்கள் விரும்பிய சியராவின் அடையாளமான, கம்பீரமான வடிவமைப்புத் தோற்றத்தை டாடா மோட்டார்ஸ் தக்கவைத்துள்ளது. இருப்பினும், அதற்கு ஒரு எலக்ட்ரிக் தோற்றத்தை கொடுப்பதற்காக, முன்பகுதி குறிப்பிடத்தக்க அளவில் தோற்றத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதி சற்றே மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, EV-க்களுக்கென பிரத்யேகமான, மூடப்பட்ட கிரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது.

Continues below advertisement

மேலும், இந்த வாகனத்தில் புதிய கவர்ச்சிகரமான அலாய் வீல்களும், வாகனம் முழுவதும் EV பேட்ஜ்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கார், டாடா சியராவின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களை விடவும், ப்ரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படும்.

க்ரெட்டா EV மற்றும் BE6 கார்களில் கூட இல்லாத AWD அம்சம்

புதிய சியரா இவி-யின் மிகப்பெரிய சிறப்பு, அதன் ஈர்க்கக்கூடிய அம்சங்கள்தான். இவை, ஹூண்டாய் க்ரெட்டா EV மற்றும் மஹிந்திரா BE6 போன்ற போட்டியாளர்களை விஞ்சும் அளவிற்கு உள்ளது. இந்த காரின் மூலம், பழைய சியராவின் 4x4 கம்பீரத்தை அந்நிறுவனம் மீண்டும் கொண்டுவருகிறது.

டாடா சியரா EV-யின் உயர் ரக மாடலில், இரட்டை மோட்டார் கொண்ட மேம்பட்ட AWD (All-Wheen Drive) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அடிப்படை மற்றும் ஸ்டாண்டர்டு மாடல்கள், ஒற்றை மோட்டாருடன் வரும் நிலையில், உயர் ரக மாடலில் இரண்டு மோட்டார்கள் இடம்பெற்றுள்ளதால், எந்தவொரு சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் எளிதாக பயணிக்க முடியும்.

ஹாரியர் EV-யின் சக்திவாய்ந்த பேட்டரி பேக் மற்றும் கேபின்

சக்தி மற்றும் பயண வரம்பைப் பொறுத்தவரை, சியரா EV தனது பேட்டரி பேக்கை, வரவிருக்கும் டாடா ஹாரியர் EV உடன் பகிர்ந்து கொள்ளும். இதனால், அதன் பயண வரம்பும், செயல்திறனும், மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.

வாகனத்தின் உட்புறம் நிச்சயமாக கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டிருக்கும். ஆனால், கேபினுக்கு ஒரு தனித்துவமான உணர்வைக் கொடுப்பதற்காக, நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பு மற்றும் ஆடம்பரமான, உயர்தரமான இருக்கை உறைகள் மற்றும் துணிகளை வழங்கக்கூடும். டாடா நிறுவனம், இந்த வாகனத்தை ஜூன் 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டாடா சியரா இவி காரின் தோற்றத்தை பார்க்கும் போது, அது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 


Car loan Information:

Calculate Car Loan EMI