Tata Sierra EV Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா சியாராவின் மின்சார எடிஷனின் அறிமுகம், நடப்பு நிதியாண்டிலேயே திட்டமிடப்பட்டுள்ளதாம்.

டாடா சியாரா மின்சார கார்:

டாடா நிறுவனம் அடுத்தடுத்த புது கார் மாடல்களை வெளியிடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு அங்கமாக தான், தயாரிப்பு நிலையை எட்டிய சியாரா கார் மாடலை, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது. இந்நிலையில், இந்த எஸ்யுவி கார் மாடலின் மின்சார எடிஷனானது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்ளாகவே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும், அதுவும் இன்ஜின் அடிப்படையிலான எடிஷனுக்கு முன்பாகவே சந்தைப்படுத்தப்படும் என்றும் வலுவான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டாடா சியாரா - வடிவமைப்பு விவரங்கள்:

வரும் 2030 நிதியாண்டிற்குள் தனது மின்சார கார்களுக்கான போர்ட்ஃபோலியோவை வலுவாக விரிவுப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. அதற்கான அடையாளமாக தான், அண்மையில் ஹாரியர் மின்சார எடிஷனை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இன்ஜின் எடிஷனிற்கு முன்பாகவே, சியாராவை EV எடிஷனில் சந்தைப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாம். இதன் வடிவமைப்பை கருத்தில் கொண்டால், சியாரா தனது சிக்னேட்சர் ஸ்டைலிங்கை அப்படியே தக்கவைத்து, ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட EV கான்செப்டை மாற்றமின்றி மாடர்ன் டச்களை பின்தொடர்கிறது. கருப்பு நிறத்தில் பனோரமிக் சன்ரூஃப் உடன் இணையும் ரூஃப் டாப் கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்பாக உள்ளது. இது மிதக்கும் ரூஃப்லைனை போன்ற தோற்றத்தை அளிகிறது. மிகப்பெரிய வீல்கள், முழு அகலத்திற்கான லைட் பார் உள்ளிட்டவை சாலையில் சியாராவின் கம்பீரமான தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்: Tata Sierra vs Sierra EV: டாடா சியாரா Vs சியாரா EV, வித்தியாசம் இருக்கா? மொத்தமும் ஒரே மாதிரியா? விலை எப்படி?

டாடா சியாரா - தொழில்நுட்ப அம்சங்கள்:

தொழில்நுட்ப அம்சங்களை கருத்தில் கொண்டால், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உடன் முன்புற பயணிக்கு என ஒரு தனி ஸ்க்ரீனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் டாடா கார்களில் மூன்று ஸ்க்ரீன்களை பெறும் முதல் கார் என்ற பெருமையை சியாரா தன் வசப்படுத்தியுள்ளது. இதுபோக ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வெண்டிலேடட் சீட்ஸ், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

டாடா சியாரா - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்:

சியாரா கார் மாடல் அறிமுகப்படுத்தும்போது, பெரும்பாலும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதனை முழுமையாக சார்ஜ் செய்தால், ஹாரியரில் இருப்பதை போன்று அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ரேஞ்சை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங், வெஹைகிள் டூ லோட் மற்றும் வெஹைகிள் டு வெஹைகிள் போன்ற அம்சங்களும் இதில் இணைக்கப்படலாம். ஹாரியரில் இருப்பதை போன்றே இரட்டை மோட்டர் வடிவமைப்பு, சியாராவில் இருக்குமா? என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. ஆனால், இதில் உள்ள பேட்டரிக்கு வாழ்நாள் முழுவதும் வாராண்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா சியாரா - விலை, போட்டியாளர் விவரங்கள்:

இன்ஜின் எடிஷனிலிருந்து வேறுபடுத்துவதற்காக, சியாராவின் மின்சார எடிஷனுக்கு என தனித்துவமான சில டிசைன் டச் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டால் இந்த காரின் தொடக்க விலை ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். வேரியண்ட் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் அதிகபட்சம் விலை இருக்கக் கூடும். இந்திய சந்தையில் சியாரா மின்சார காரானது, மஹிந்திராவின் XUV.e8 மற்றும் BYD eMax 7 உள்ளிட்ட கார் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும்.

டாடா சியாரா  - இன்ஜின் எடிஷன் எப்படி?

இன்ஜின் எடிஷன் சியாரா கார் மாடலில் 168 PS மற்றும் 280 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதோடு, 170 PS மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இவற்றிற்கு 6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் மற்றும் செவன் ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோ ஆகிய ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI