Tata Sierra: டாடா நிறுவனம் எதிர்பார்த்ததை விட குறைந்த கால இடைவெளியிலேயே அடுத்மின்சார காரை சந்தைப்படுத்த உள்ளது.
டாடா சியாரா மின்சார கார்:
டாடா நிறுவனத்தின் புதிய Sierra EV 2025 கார் மாடல்,அடுத்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மயில் தான் இந்நிறுவனம் கர்வ் மாடலை அறிமுகப்படுத்தியது. இதனால், அடுத்த கார் மாடல் அறிமுகமாக சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டாடா மோட்டார்ஸின் சியரா EVயை நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக சந்தையில் அணுகலாம். சியரா EV முதலில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து ICE இன்ஜின் எடிஷன் சந்தைப்படுத்தப்படும். சியரா EV ஆனது டாடா மோட்டார்ஸின் அதிக பிரீமியம் EVகளில் ஒன்றாக இருக்கும், அதே நேரத்தில் இந்த எஸ்யுவி ஆனது ஒரு பெஸ்போக் EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
சியாரா காரின் வடிவமைப்பு விவரங்கள்:
கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டப்பொது இருந்த, கிட்டத்தட்ட தயாரிப்பு எடிஷனுக்கு மிக நெருக்கத்தில் இருந்த டிசைனே உற்பத்தியிலும் தொடரும் என நம்பப்படுகிறது. புதிய சியரா ஐந்து கதவுகள் மற்றும் பாக்ஸி கோடுகளுடன் கூடிய தீவிர தோற்றத்தில் வரும்.
தனித்துவமான B-பில்லர் வடிவமைப்பும் இருக்கும் அதே நேரத்தில் சில அசல் வடிவமைப்பு குறிப்புகளும் வைக்கப்படும். அளவு வாரியாக சியரா சுமார் 4.3 மீ நீளம் இருக்கும், அதாவது சஃபாரி அல்லது ஹாரியரை விட சிறியதாக இருக்கும். அதே சமயம் கர்வ்வின் அளவைச் சார்ந்து இருக்கும். நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் இது ஹாரியர் EVக்கு கீழேயும், Curvv EVக்கு மேலேயும் இருக்கும்.
டாடா சியாரா EV
டாடா சியாரா அம்சங்கள்:
டாடா சியரா EV-யின் அம்சங்களை பற்றி பேசுகையில், காரின் உட்புறம் ஒரு லவுஞ்ச் போன்ற அமைப்புடன், பின்புற இருக்கை உங்களைச் சுற்றி இருக்கும். மேலும், இது 12.3-இன்ச் தொடுதிரை கொண்டிருக்கும். ஆனால் மற்ற டாடா கார்களில் இருந்து சென்டர் கன்சோல் வித்தியாசமாக இருக்கும். பின்புறத்தில் மடிப்பு மேசைகளுடன் கூடிய லவுஞ்ச் இருக்கைகளை எதிர்பார்க்கலாம் மற்றும் இருக்கைகள் தொடை ஆதரவையும் (Thigh Support) நீட்டிப்பையும் கொண்டிருக்கலாம். மற்ற உபகரண விவரங்களில் பனோரமிக் சன்ரூஃப், பயணிகள் இருக்கைக்கான மினி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, ஒரு ஃப்ரங்க், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ADAS, வாகனத்திலிருந்து லோட் (V2L) மற்றும் வாகனத்திலிருந்து வாகனம் (V2V), குளிரூட்டப்பட்ட இருக்கைகள், இரட்டை ஆற்றல் கொண்ட முன் இருக்கைகள் என பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
டாடா சியாரா EV
விலை விவரங்கள்:
புதிய Gen-2 Pure EV இயங்குதளமானது தட்டையான தளத்துடன் கூடிய இடத்தையும் குறிக்கும். சியரா EVக்கு 55kWh பேட்டரி பேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 550 கிமீ வரம்பு இருக்கலாம். அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், EV எடிஷனின் விலை சுமார் ரூ. 25 லட்சமாக இருக்கும். இது Curvv EV-ஐ விட சற்று அதிகமான விலையாகும்.
Car loan Information:
Calculate Car Loan EMI