இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான டாடா சஃபாரி (Tata Safari EV) மின்சார காரை அறிமுகம் செய்ய முழுவீச்சில் தயாராகி வருகிறது. இது இந்திய சந்தையின் முதல் 3 வரிசை (7 சீட்டர்) எலக்ட்ரிக் எஸ்யுவி காராக இருக்கும் என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.

Continues below advertisement

தரமான பேட்டரி

பேட்டரி மற்றும் மைலேஜைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் பெரிய பேட்டரி பேக் இதில் இடம்பெறும். சுமார் 60 முதல் 80 kWh வரை இருக்கும். இதன் மூலம், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 627 கிலோமீட்டருக்கு எந்த கவலையுமின்றி பயணிக்க முடியும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடினமான சாலைகளை எளிதில் கடக்க ஆல்-வீல் டிரைவ் (AWD) தொழில்நுட்பமும் இதில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்புகள் என்னென்ன?

வடிவமைப்பைப் பொறுத்தவரை, தற்போதுள்ள சஃபாரி காரின் கம்பீரத்தை தக்கவைத்தாலும், எலக்ட்ரிக் காருக்கே உரித்தான மூடிய முன்பக்க கிரில் மற்றும் புதிய ஏரோ-டிசைன் அலாய் வீல்கள் காரின் அழகை மேலும் மெருகேற்றும்.

Continues below advertisement

இதுதவிர 360 டிகிரி கேமரா, பாதுகாப்பான பயணத்திற்கு ADAS Level 2 தொழில்நுட்பம் மற்றும் நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், என பல சொகுசு வசதிகளுடன் இந்த கார் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்?

நடப்பு ஆண்டின் இறுதிக்குள், குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களை குறிவைத்து இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனத்தின் அதிநவீன பிரத்யேக acti.ev பிளாட்ஃபார்மில் இந்த சஃபாரி மின்சார கார் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் சுற்றுச்சூழலுக்கு மாசற்ற ஒரு காரையும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு டாடா சஃபாரி மின்சார கார் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI