டாடா மோட்டார்ஸின் பிரபலமான 7-சீட்டர் எஸ்யூவியான சஃபாரி, எலெக்ட்ரிக் வடிவத்தில் (Safari EV) வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் நடந்தபோது காரின் வடிவமைப்பு மற்றும் வசதிகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்


தற்போதைய சஃபாரியின் அதே கம்பீரமான வடிவமைப்பு, நேரான பின்பகுதி, ரூஃப் ரெயில்கள், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் 3-வரிசை இருக்கைகள் கொண்ட 7-சீட்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது. டாடா சியரா மாடலில் உள்ளதைப்போல டிரைவருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், மைய தொடுதிரை மற்றும் முன்பக்கப் பயணியருக்கு என தனி திரை என 'டிரிபிள் ஸ்கிரீன்' (Triple-screen) டேஷ்போர்டு இதில் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டிஜிட்டல் IRVM மற்றும் டேஷ்கேம், 540 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், JBL ஆடியோ சிஸ்டம், லெவல்-2 ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோ பார்க் அசிஸ்ட் ஆகிய வசதிகள் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், காரிலிருந்து பிற மின்சாதனங்கள் மற்றும் வேறு இவி-களுக்கு சார்ஜ் செய்யும் V2L மற்றும் V2V பை-டைரக்ஷனல் சார்ஜிங் வசதிகளும் இடம்பெறவுள்ளன.

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்


ஹாரியர் இவி தயாரிக்கப்படும் அதே 'Acti.ev+' பிளாட்ஃபார்மில் சஃபாரி இவியும் உருவாக்கப்படுகிறது. இதில் 65 kWh மற்றும் 75 kWh என இரு பேட்டரி பேக் தேர்வுகள், ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் டூயல் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷன்களில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஹாரியர் இவி மாடலில் 65 kWh பேட்டரி 538 கி.மீ ரேஞ்சும், 75 kWh பேட்டரி 627 கி.மீ (AWD மாடல் 622 கி.மீ) ரேஞ்சும் தருகிறது. கூடுதல் எடை மற்றும் பெரிய கேபின் காரணமாக சஃபாரியின் ரேஞ்ச் சற்று மாறுபட்டாலும், சுமார் 600 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 20 முதல் 80 சதவீத பேட்டரியை 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதி இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விவரம்


சஃபாரி இவியின் வெளியீட்டுத் தேதி மற்றும் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது டாடா ஹாரியர் இவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹21.79 லட்சம் முதல் ₹30.54 லட்சம் வரை உள்ள நிலையில், பெரிய கேபின், கூடுதல் இருக்கைகள் மற்றும் பிரீமியம் வசதிகள் காரணமாக சஃபாரி இவியின் விலை அதனைவிட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இது சந்தையில் உள்ள பெரிய எலெக்ட்ரிக் எஸ்யூவி-க்களுக்குக் கடும் போட்டியாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI