Tata Punch EV: டாடா நிறுவனத்தின் பன்ச் மின்சார கார் 2024 மாடலானது, ஸ்டேண்டர்ட் மற்றும் லாங்க் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


டாடா பஞ்ச் மின்சார கார் (Tata Punch EV):


2024 ஆம் ஆண்டிற்கான டாடா மோட்டார்ஸின்  முதல் புதிய மாடலாக,  பஞ்ச் EV அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்டின் நான்காவது முழு மின்சார கார் மற்றும் இரண்டாவது மின்சார SUV ஆகும். புதிய பஞ்ச் EVக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டாடாவின் புதிய EV-மட்டுமே விற்பனை நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான ஷோரூம்கள் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் போர்ட்டல் வழியாக ரூ.21,000 கட்டணம் செலுத்த் இந்த வாகனத்தை முன்பதிவு செய்யலாம். டாடா பஞ்ச் EV ஆனது Gen 2 EV கட்டமைப்பில் கார் தயாரிப்பாளரின் முதல் மாடலாகும்.


Tata Punch EV வடிவமைப்பு:


புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்புகளுடன், புதிய டாடா பஞ்ச் மின்சார வாகனமானது Nexon EV போல தோற்றமளிக்கிறது . 


பானட்டின் முன்புறத்தில் முழு அகலத்திற்கான ஒளிப்பட்டை மற்றும் ஒரு பிளவு ஸ்ப்லிட் முகப்பு விளக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதான முகப்பு விளக்கானது கிளஸ்டர் நெக்ஸான் EV-ஐ சார்ந்திருக்கிறது. இந்த மின்சார எஸ்யூவி முன்புறத்தில் சார்ஜிங் சாக்கெட் கொண்ட முதல் டாடா EV ஆகும். பிளாஸ்டிக் உறைப்பூச்சின் மீது புதிய செங்குத்து ஸ்லேட்டுகள் மற்றும் ஒரு ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டைப் பெற்று கீழ் பம்பர் முற்றிலும் புதியதாக உள்ளது. பின்புறத்தில் Y- வடிவ பிரேக் லைட் அமைப்பு கொண்டுள்ளதோடு,  கூரையில் ஸ்பாய்லர் மற்றும் டூயல்-டோன் பம்பரையும் பெறுகிறது. Punch EV ஆனது, பின்புறத்தில் டிரம் அமைப்பைப் பெறும் ICE பஞ்சைப் போலல்லாமல், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய 16-இன்ச் அலாய்களின் புதிய தொகுப்பைப் பெறுகிறது. 






பவர்டிரெயின் விவரங்கள்:


பஞ்ச் மாடல் புதிய acti.ev கட்டமைப்பை உருவாக்கப்பட்டு இருந்தாலும், பஞ்ச் EVயின் குறிப்பிட்ட தொழில்நுட்ப விவரங்களை இன்னும் வெளியாகவில்லை. ஸ்டேண்டர்ட் மற்றும் லாங் ரேஞ்ச் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த கார் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது.  முறையே 25kWh மற்றும் 35kWh பேட்டரி பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வேரியண்ட் 3.3 கிலோவாட் ஏசி சார்ஜரை மட்டுமே பெற, இரண்டாவது வேரியண்ட் 7.2 கிலோவாட் ஏசி சார்ஜரைப் பெறுகிறது. இது DC வேகமாக சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கும். இந்த மாடுலர் பிளாட்பார்ம் மாடல் மற்றும் பேட்டரியைப் பொறுத்து 300 கிமீ முதல் 600 கிமீ வரை வரம்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே, பஞ்ச் EV ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது 300 கிமீ முதல் 400 கிமீ வரையிலான தூரம் பயணிக்கக் கூடும்.


உட்புற வடிவமைப்பு, அம்சங்கள்:


புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை என்ற சிறப்பம்சத்துடன், உட்புறத்தில் பஞ்ச் EV ஆனது டேஷ்போர்டை அடுக்குகள் வடிவத்தில் பெறுகிறது. புதியதாக 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பெரிய டாடா எஸ்யூவிகளில் இருந்து பெறப்பட்ட டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது. தொடக்க வேரியண்ட்களில், 7.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் கிடைக்கும். நெக்ஸான் EVயில் ருக்கும் ஜூவல்டு ரோட்டரி டிரைவ் செலக்டர் பஞ்சில் லாங் ரேஞ்ச் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. 


மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களுடன், டாப்-ஸ்பெக் பஞ்ச் EV-யில் 360 டிகிரி கேமரா, தோல் இருக்கைகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள், பயணக் கட்டுப்பாடு மற்றும் புதிய Arcade.ev ஆப்ஸ் தொகுப்பு ஆகிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. சன்ரூஃப் பயனாளரின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது.  பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், ஸ்டேண்டர்ட் ABS மற்றும் ESC, பிளைண்ட் வியூ மானிட்டர், அனைத்து இருக்கைகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் ஒரு SOS செயல்பாடு ஆகியவற்றை கொண்டுள்ளது.


விலை விவரங்கள்:


ஸ்டேண்டர்ட் பஞ்ச் EV ஆனது ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ ஆகிய 5 டிரிம்களில் கிடைக்கிறது. அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் வேரியண்ட் ஆனது அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு ஆகிய 3 டிரிம்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட்களுமே ஐந்து டூயல்-டோன் பெயிண்ட் வண்ண விருப்பங்களைப் பெறுகின்றன. Nexon EV MR மற்றும் Tiago EV MR இடையே நிலைநிறுத்தப்படும் Tata Punch EV ஆனது Citroen eC3ஐ இலக்காகக் கொண்டது. இதன் விலை ரூ.10 லட்சம் முதல் 13 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.  


 


Car loan Information:

Calculate Car Loan EMI