டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
Tata Punch EV: டாடா பஞ்ச் இ.வி. காருக்கு ரூ.1.45 லட்சம் வரை மெகா தள்ளுபடி: விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்!

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் அசைக்க முடியாத முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பாதுகாப்பு மற்றும் நவீன சிறப்பம்சங்களில் பட்டையைக் கிளப்பும் டாடா பஞ்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு தற்போது அதிரடியாக ரூ.1,45,000 வரை மெகா தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் கார் வாங்கத் திட்டமிட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் மைலேஜ் (ரேஞ்ச்)
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா பஞ்ச் இ.வி. காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதன் டாப் எண்ட் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 15.49 லட்சமாக உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அதிரடித் தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் காரை சொந்தமாக்கலாம். இந்த வாகனம் இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளில் (25 kWh மற்றும் 35 kWh) விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் சிறிய பேட்டரி கொண்ட மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோ மீட்டர் தூரம் வரை சிறப்பான ரேஞ்ச் தரும். அதேசமயம், பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட லாங் ரேஞ்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 400 கிலோ மீட்டர் வரை தடையின்றிப் பயணிக்க முடியும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.

என்னென்ன சிறப்பம்சங்கள்?
பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருந்தாலும், விலையுயர்ந்த பிரீமியம் கார்களுக்கு இணையான தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளன. காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் அளவிலான அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டட் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற பல ஆடம்பர வசதிகள் பயணிகளின் சௌகரியத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வசதிகள்
டாடா கார்கள் என்றாலே பயணிகளின் பாதுகாப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் என்று கூறப்படும். இந்த டாடா பஞ்ச் இ.வி. பாரத் என்சிஏபி நடத்திய கடுமையான கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அபார சாதனை படைத்துள்ளது. பயணிகளின் முழுமையான பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் தரமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























