Tata Punch EV Facelift Range: டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், வரும் பிப்ரவரி 20ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

வெளியீட்டிற்கு தயாரான டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் பிப்.20ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. விரைவில் வெளியாக உள்ள புதிய மாடலானது எந்தவித மறைப்பும் இன்றி, சாலை பரிசோதனைகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள டிசைன் மாற்றங்களை அறிய உதவுகின்றன. அதேநேரம், டாடா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த மின்சார எஸ்யுவி ஆனது 593.6 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

593 கிமீ ரேஞ்ச்.. மாஸ் காட்டும் டாடா பஞ்ச்..

ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த மூத்த ஊடகவியலளர் ஓருவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலில், ஜெய்பூரிலிருந்து உதய்பூருக்கு அதாவது ஒரே அடியாக 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல திட்டமிட்டு பயணத்தை தொடங்கியுள்ளார். திட்டமிட்ட வழியில் பயணித்து 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த பிறகும் வாகனத்தில் 67% சார்ஜ் இருந்துள்ளது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கான உதய்பூருக்கு அதாவது 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிறகும், காரில் 34 சதவிகித சார்ஜ் இருந்துள்ளது. இதையடுத்து வாகனத்தின் சார்ஜ் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் வரை பயணிக்க முடிவு செய்யப்பட்டு, தொடர்ந்து முன்னோக்கி சென்றுள்ளனர். அந்த வகையில் அண்டை மாநிலமான குஜராத் எல்லைக்குள் நுழைந்து, ஹிமாத்நகர் வரை சென்றுள்ளது. அதன்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது 593.3 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளித்து ஆச்சரியமூட்டியுள்ளது.

டாடா பஞ்ச் - பேட்டரியில் அப்க்ரேடா?

டாடா பஞ்சில் வழங்கப்பட்டுள்ள அப்க்ரேடட் பேட்டரி தொடர்பான விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், சோதனை பயணமானது மாடலின் கூடுதல் ரேஞ்சை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள 593 கிலோ மீட்டர் என்ற ரேஞ்சானது, இந்திய சந்தையில் மின்சார கார் சந்தையில் டாப் பிரிவில் உள்ள கார் மாடல்களுக்கு இணையானதாகும். பரிசோதனையின் போது பெரும்பாலும் வாகனமானது நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் - பேட்டரி அம்சங்கள்

மெக்கானிக்கல் அடிப்படையில் டாடா பஞ்ச் மின்சார காரில் ஏற்கனவே இருக்கும், 25KWh மற்றும் 35KWh ஆகிய பேட்டரி அம்சங்கள் அப்படியே தொடர உள்ளது. இவை முன்புற ஆக்சிலில் அமைக்கப்பட்டுள்ள மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி ஆனது 82hp மற்றும் 114Nm ஆற்றலை உற்பத்தி செய்து 265 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. அதேநேரம், பெரிய பேட்டரி ஆனது 122hp மற்றும் 190Nm ஆற்றலை உற்பத்தி செய்து 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. இந்நிலையில் சோதனையில் காட்டப்பட்டுள்ள கூடுதல் ரேஞ்சை கொண்டுள்ள, புதிய பஞ்சின் ஃபேஸ்லிஃப்டானது 45KWh பேட்டரி பேக்கை நெக்ஸானிலிருந்து கடன் வாங்கியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற டிசைன்

புதிய பஞ்ச் கார் மாடலானது வெளிப்புறத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் தூய்மையான லே-அவுட்டில் பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏர் டேம் மற்றும் ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவையும் திருத்தப்பட்டுள்ளன. அதேநேரம், Y வடிவிலான எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் மற்றும் மையப்பகுதியில் பொருத்தப்படும் சார்ஜிங் வசதி அப்படியே தொடர்கிறது.

பக்கவாட்டில் ஒட்டுமொத்த தோற்றமானது கிட்டத்தட்ட பழைய மாடலை போன்றே அப்படியே தொடர்கிறது. அதேநேரம், குறிப்பிட்ட வேரியண்ட்கள் மீது புதிய அலாய் வீல்களை அறிமுகப்படுத்தப்பவும் டாடா திட்டமிட்டுள்ளது.  இதுபோக ஏற்கனவே இருக்கும் வண்ண ஆப்ஷன்களுடன் ப்ரவுன் மற்றும் ப்ரைட் எல்லோ போன்ற நிறங்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம்.

பின்புற வடிவமைப்பானது அண்மையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமான இன்ஜின் அடிப்படையிலான பஞ்சின் டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது. முழு அகலத்திற்கான லைட் - பார் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.15.32 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI