இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது டாடா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தனது கார்களுக்கு தள்ளுபடி அறிவிப்பது போல, டாடா நிறுவனமும் தனது கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.
1.45 லட்சம் தள்ளுபடி:
டாடா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கும் ஜுலை மாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற காராக திகழ்வது Tata Punch. இந்த காரின் மின்சார வேரியண்ட் Tata Punch EV. இந்த காருக்கும் ஜுலை மாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாத தள்ளுபடியாக Tata Punch EV காருக்கு ரூபாய் 1.45 லட்சம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது டாடா வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 30 கிலோவாட் மற்றும் 40 கிலோவாட் பேட்டரி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விலையே 8.88 லட்சம்:
6 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.33 லட்சம் ஆகும். இதனால், ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 8.88 லட்சத்திற்கே வாங்க இயலும். அதேபோல, இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 13.58 லட்சம். தள்ளுபடி விலையால் ரூபாய் 12.13 லட்சத்திற்கே வாங்க இயலும்.
468 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த காரில் 30 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 355 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 87 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 40 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 468 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 127 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 154 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
இந்த காரில் 10.25 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளேவாக உள்ளது. இதன் வசீகரமான தோற்றமும், உட்கட்டமைப்பு வசதியும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. 65 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 26 நிமிடங்களில் சார்ஜ் ஏறுகிறது. 360 டிகிரி கேமரா வசதி இதில் உள்ளது. முன் இருக்கைகளில் வென்டிலேட்டட் வசதி உள்ளது. ஏர் ப்யூரிஃபயர் உள்ளது.
சிறப்புகள்:
சன்ரூஃப் வசதி, வாய்ஸ் அசிஸ்ட் வசதி உள்ளது. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட், அஸ்சென்ட் டிஸ்சென்ட் கன்ட்ரோல், ஹை ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் உள்பட 60 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 195 மி.மீட்டர் ஆகும். பெர்மனென்ட் மேக்னட் சின்க்ரோனஸ் மோட்டார் வசதி உள்ளது. 100 கி.மீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டுகிறது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட் வசதிகள் உள்ளது.
டிக்கி வசதி 366 லிட்டர் ஆகும். இந்த Tata Punch EV காரின் உயரம் 1633 ஆகும். ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வசதி உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI